- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை செஞ்சா இந்தியா வந்து விளையாடும்.. இல்லனா வாய்ப்பில்லை.. பாகிஸ்தானுக்கு ஹர்பஜன் போட்ட கண்டிஷன்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய நாட்டில் நடைபெற உள்ள அத்தொடரை வெற்றிகரமாக நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இருப்பினும் அத்தொடரில் தங்கள் நாட்டுக்கு வந்து இந்தியா விளையாடுமா என்பது உறுதியாக தெரியாததால் பாகிஸ்தான் கவலையில் உள்ளது.

ஏனெனில் ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி வரவில்லையெனில் அது பாகிஸ்தானுக்கு எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்காது. மறுபுறம் எல்லை பிரச்சினை காரணமாக 2008 முதலே பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.

- Advertisement -

ஹர்பஜன் கண்டிஷன்:

அதே போல தற்போது தங்களது 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. மறுபுறம் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி போன்ற பல முன்னாள் கேப்டன்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தால் இந்திய அணி தாராளமாக சென்று பாகிஸ்தானில் விளையாடலாம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நினைப்பதை சொல்கிறார்கள்”

- Advertisement -

பாதுகாப்பு உத்திரவாதம்:

“நாம் நம்முடைய கண்ணோட்டத்தில் இருக்கும் கருத்துக்களை சொல்கிறோம். இருப்பினும் பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை எனில் நம்முடைய அணி அங்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் கொடுத்தால் பின்னர் அங்கு விளையாடுவதில் எந்த தயக்கமும் இல்லை”

இதையும் படிங்க: இதுதான் என்னோட கடைசி தொடர்.. இதுக்கு மேல நான் கிரிக்கெட் விளையாட மாட்டேன் – ஓய்வை அறிவித்த பிராவோ

“அது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கும். ஏனெனில் நாளின் இறுதியில் அது கிரிக்கெட்டை தாண்டிய பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டதாகும். ஒரு கிரிக்கெட்டராக நான் நீங்கள் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் விளையாடுங்கள் என்றே சொல்வேன். ஆனால் பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது. எனவே அங்கே பாதுகாப்புக்கு கேரண்டி கொடுக்கும் வரை நாம் செல்லக்கூடாது” என்று கூறினார்.

- Advertisement -