2 வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரு.. அஸ்வின் ஓய்வுக்கு பிசிசிஐ திட்டமும் காரணம்.. ஹர்பஜன் ஆதங்க பேட்டி

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக (765) விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளர் ஆவார். இருப்பினும் 38 வயதாகும் அவர் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் என்றாலும் திடீரென ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யமாக அமைந்தது.

இந்நிலையில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் அல்லது சிட்னி போட்டியில் அஸ்வின் விளையாடுவதற்கான சூழல் இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பை அவசரத்தால் ஓய்வு பெற்று அஸ்வின் தவற விட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்ததாக சொந்த மண்ணில் 2025 அக்டோபர் மாதம் தான் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம்:

அத்துடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். அதனாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியில் இப்படி முடிவெடுத்தது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது”

“சிட்னி அல்லது மெல்போர்னில் அஸ்வின் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனெனில் அங்கே ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அவருடைய முடிவை நாம் மதிக்க வேண்டும். நன்கு சிந்தித்து கவனத்துடன் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். பெரிய பவுலரான அவருக்கு நான் சல்யூட் செய்கிறேன். மேட்ச் வின்னிங் பவுலரான அவர் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்”

- Advertisement -

பிசிசிஐ திட்டம்:

“அவருடைய வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள். எனக்கு கிடைத்த தகவல் படி இந்தியா அடுத்ததாக 2025 அக்டோபரில் தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உண்மையில் இவ்வளவு சாதனைகளை செய்துள்ள நீங்கள் இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு கூட வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: ரோஹித், புஜாரா, பும்ரா, ராகுல் உள்ளிட்ட தற்போதைய இந்திய வீரர்கள்.. அஸ்வினுக்கு பிரியா மனதுடன் வாழ்த்து

“நான் கேட்ட வரை தன்னுடைய இடத்தில் இனிமேல் வாஷிங்டன் சுந்தருக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அஸ்வின் கருதுகிறார். இங்கிலாந்தில் 2 ஸ்பின்னர்கள் (ஜடேஜா, அஸ்வின்) மட்டுமே இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இது போன்ற விஷயங்கள் தான் அஸ்வின் மனதில் ஓய்வு முடிவை எடுக்க வைத்திருக்கலாம். ஆனால் இது அவருக்கு எளிதாக இருந்திருக்காது என்று என்னால் சொல்ல முடியும்” எனக் கூறினார்.

Advertisement