சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2வது அதிக (765) விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்த வாழ்த்து பின்வருமாறு. “நாம் நிறைய வருடங்கள் ஒன்றாக விளையாடினோம். அதில் உருவாக்கிய நிறைய நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்”
“முதல் நாளிலிருந்தே நீங்கள் மேட்ச் வின்னர். வரவிருக்கும் இளம் பவுலர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளீர்கள். அஸ்வின் கிளாசிக் ஆக்சனுடன் கண்டிப்பாக நிறைய இளம் பவுலர்கள் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இந்திய அணியின் உண்மையான வீரர். இந்தியா மற்றும் உலக கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியினர் வாழ்த்து:
ஜஸ்ப்ரித் பும்ரா. “உங்களுடன் விளையாடி உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டது பெருமை. களத்திற்கு வெளியே நீங்கள் இருந்த விதம் குறிப்பிடத்தக்கது. நீங்கள் நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர். அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் ஆஸ். இந்தியா மற்றும் உலக கிரிக்கெட்டில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. உங்களுடைய வருங்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.
கேஎல் ராகுல். “ஜாம்பவான் கேரியருக்கு வாழ்த்துக்கள் ஆஸ். உங்களுடைய திறன், அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை எங்கள் அனைவரையும் உபயோகப்படுத்தியது. உங்களுடன் களத்தை பகிர்ந்து கொண்டது கௌரவம். உங்கள் வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட். “விளையாட்டின் உண்மையான லெஜெண்ட்”
விடைபெற்ற லெஜெண்ட்:
“உங்களுடன் களத்தை பகிர்ந்து கொள்வதும், கற்றுக் கொள்வதும், மகத்துவத்தை காண்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. வரவிருக்கும் அனைத்திலும் உங்களுக்கு வாழ்த்துக்கள். கமான் ஆஸ் என்பது எப்போதும் இருக்கும்” என்று வாழ்த்தியுள்ளார். அஜிங்க்ய ரஹானே. “அற்புதமான பயணத்திற்கு வாழ்த்துக்கள் அஸ்வின். உங்களுக்காக ஸ்லிப் பகுதியில் நிற்கும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு காத்திருக்கும். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
நீண்ட காலமாக ஒன்றாக விளையாடிய அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்துள்ளது தமக்கு ஏமாற்றத்தையும் பழைய மலரும் நினைவுகளை கொடுத்துள்ளதாக புஜாரா கூறியுள்ளார். அத்துடன் தம்முடைய நண்பனான அஸ்வினுக்கு அவர் மிகப்பெரிய வாழ்த்து பதிவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முகமது சிராஜ். “மேட்ச் வின்னிங் ஸ்பெல் முதல் வரலாற்று சாதனை வரை அஸ்வின் பாய் உங்களுடைய பயணம் அற்புதத்துக்கும் குறைவில்லாதது. அனைத்துக்கும் நன்றி ஆஸ் பாய். உங்களுடைய மரபு என்றும் நீடிக்கும்” என்று பாராட்டியுள்ளார்.
சுப்மன் கில். “இளம் வீரராக வந்து நீங்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் முன்னேறியதை பார்த்தது உத்வேகத்தை கொடுத்தது. வலைப்பயிற்சியில் உங்களுடன் போட்டியை மிஸ் செய்வேன். ஓய்வுக்கு வாழ்த்துக்கள் ஆஸ் பாய்” என்று பாராட்டியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால். “ஆஸ் அண்ணா. இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களுடைய பங்களிப்பு பொருத்த முடியாதது. உங்களுடன் களத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. அனைத்திற்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் ஓய்வெடுங்கள்” என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கபில் தேவ் வாழ்நாள் சாதனையை உடைத்த பும்ரா.. ஆஸியின் ஆல் டைம் ஆசிய ஹீரோவாக சரித்திர சாதனை
“பல வருடங்களாக இந்திய அணியில் உங்களுடன் இடத்தை பகிர்ந்து கொண்டது கௌரவம். ஆஸ் அண்ணா பிஆர் ரீசன்” என்று அஸ்வினுடைய இணை பிரிந்த ஜோடி ரவீந்திர ஜடேஜா பாராட்டியுள்ளார். இது போக சஹால், புவனேஸ்வர் குமார், ஸ்ரேயாஸ் ஐயர், மயங் யாதவ் உட்பட நிறைய இந்திய வீரர்கள் ஒரு பதிவில் அடக்க முடியாத அளவுக்கு அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



