- Advertisement -
ஐ.பி.எல்

என் முன்னாள் டீமை இப்படி பாக்குறது வலிக்குது.. மும்பை தோல்விக்கு பாண்டியா காரணமில்லை.. ஹர்பஜன் ஆதங்கம்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட அந்த அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.

ஏனெனில் 2022 சீசனில் அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட அவர் குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கோப்பை வென்று கொடுத்தார். அத்துடன் 2வது வருடம் அவருடைய தலைமையில் குஜராத் அணி ஃபைனல் வரை சென்று அசத்தியது. அதனால் தம்மை வளர்த்த மும்பை அணிக்கும் பாண்டியா முதல் வருடத்திலேயே கோப்பையை பரிசளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

- Advertisement -

ஹர்பஜன் ஆதங்கம்:
ஆனால் அவருடைய தலைமையில் 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது. மும்பையின் இந்த தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கேப்டனாக சரியான முடிவுகளை எடுக்காமல் சொதப்பிய பாண்டியா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தம்முடைய முன்னாள் அணியான மும்பை இப்படி 10வது இடத்தை பிடித்ததை பார்ப்பது வலியை கொடுப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியா காரணமல்ல என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். மாறாக குஜராத் அணியில் நன்றாக கேப்டனாக செயல்பட்ட அவரை மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக கேப்டனாக அறிவித்ததே தோல்விக்கு காரணமானதாக ஹர்பஜன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை பெரிய அணி. அவர்களுக்காக நானும் விளையாடியுள்ளேன். சிறந்த நிர்வாகத்தை கொண்ட அவர்கள் அணியை நன்றாக நடத்துவார்கள்”

- Advertisement -

“ஆனால் இந்த முடிவு அவர்களுக்கே பாதகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை அவர்கள் வருங்காலத்தை பற்றி சிந்தித்திருக்கலாம். அந்த முடிவு பற்றி அவர்கள் அணியுடன் ஒன்றாக அமர்ந்து பேசவில்லை என்பது போல் தெரிகிறது. அதனால் என்னுடைய பழைய அணியான மும்பை இது போன்ற மோசமான தோல்விகளை சந்தித்து தடுமாறுவதை பார்ப்பது எனக்கு வலியை கொடுக்கிறது”

இதையும் படிங்க: முகத்தில் அடிச்ச மாதிரி பேசுனாலும் மொத்த டீமையும் நெருப்பா மாத்திடுவாரு.. கம்பீர் அதுக்கு சரியானவர்.. வாசிம் அக்ரம்

“ஒருவேளை அந்த முடிவை எடுத்த டைமிங் சரியில்லை என்று நினைக்கிறேன். அந்த முடிவை ஒரு வருடம் கழித்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். அது ஹர்திக் பாண்டியாவின் தவறல்ல. ஏனெனில் அவர் குஜராத்துக்கு சிறந்த கேப்டனாக செயல்பட்டார். அதே சமயம் கேப்டன் யாராக இருந்தாலும் அணியை ஒற்றுமையாக வைத்திருப்பது சீனியர் வீரர்களின் வேலை. ஏனெனில் கேப்டன்கள் வருபவர்கள் போவார்கள். மொத்தத்தில் இம்முறை மும்பை அணியாக விளையாடவில்லை” என்று கூறினார்.

- Advertisement -