- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த ஸ்பெஷல் திறமையுடைய.. இஷான் மாதிரி பீட்டர்சன் கூட என்னை அடிச்சதில்லை.. ஹர்பஜன் பாராட்டு

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து சுப்மன் கில் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருந்த அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு இஷான் கிசானை தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் கடந்த 2 வருடங்களாக இஷான் கிசான் இந்திய அணியிலேயே இல்லை.

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வந்த அவர் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஜார்க்கண்ட் முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவினார். குறிப்பாக இறுதிப்போட்டியில் சதமடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். அதன் காரணமாக அவருக்கு உலகக்கோப்பை அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராகவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

திறமையான இஷான்:

இந்நிலையில் பார்ப்பதற்கு உயரம் குறைவான இஷான் கிசான் பவரான ஷாட்டுகளை வைத்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக மும்பையில் விளையாடிய போது தமக்கு எதிராக கெவின் பீட்டர்சனைக் காட்டிலும் இஷான் கிசான் ஸ்விட்ச் ஹிட் ஷாட்டுகளை சிறப்பாக விளையாடியதாக ஹர்பஜன் பாராட்டியுள்ளார். எனவே திறமையான அவர் கம்பேக் கொடுத்ததில் தமக்கு மகிழ்ச்சி என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் உயரம் குறைவானவர். ஆனால் அவர் பெரிய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர். அவருடைய திறமையை நான் ஏற்கனவே அங்கீகரித்துள்ளேன். அவருக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது மும்பையில் நடைபெற்ற ஒரு கண்காட்சி போட்டி என்பது எனக்கு நினைவிருக்கிறது”

- Advertisement -

ஹர்பஜன் பாராட்டு:

“அந்தப் போட்டியில் நான் மெதுவாக வீசிய பந்தை அவர் கொஞ்சம் தாமதமாக கவர்ஸ் திசையில் அடித்தார். அடுத்தப் பந்தை முட்டி போட்டு அவர் பவுண்டரியாக அடித்தார். அதனால் இவருக்கு எதிராக நாம் மெதுவான பந்தை வீசக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அடுத்த பந்தை கொஞ்சம் வேகமாக வீசிய போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். அப்போதே அவர் அற்புதமான வீரர் என்று நான் சொன்னேன்”

இதையும் படிங்க: நானா இருந்தா கில்லுக்கு பதில் அவரை செலக்ட் பண்ணிருப்பேன்.. இதுக்கு மேல என்ன செய்யனும்.. திலிப் வெங்சர்கார்

“ஏனெனில் அந்த இளம் பையனைப் போல கெவின் பீட்டர்சன் கூட எனக்கு எதிராக ரிவர்ஸில் ஸ்விட்ச் ஹிட் அடித்ததில்லை. எனவே அவரிடம் இந்த ஸ்பெஷலான திறமை இருக்கிறது. சமீப காலங்களில் இந்திய அணியில் இல்லாமல் இருந்த அவர் கம்பேக் வந்துள்ளதற்காக மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நிறைய பவரை கொண்ட அவர் வலுவான வீரர். இன்னும் இளமையாக இருக்கும் அவரிடம் நல்ல முதிர்ச்சி வந்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -