டாப் 4 தான் பில்லர்.. 2வது டெஸ்டில் கில் பெஞ்சில் இருக்கட்டும்.. ரோஹித் பேட்டிங் பற்றி ஹர்பஜன் பேட்டி

Harbhajan Singh
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து ரோகித் சர்மா தலைமையில் அடிலெய்ட் நகரில் நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகி வருகிறது.

அந்த போட்டியில் ரோகித் சர்மா வருவதால் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 50* ரன்கள் குவித்து அசத்தினார். எனவே அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

- Advertisement -

ஹர்பஜன் ஆலோசனை:

இந்நிலையில் 2வது போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக துருவ் ஜுரேல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா 5வது அல்லது 6வது இடத்தில் விளையாடுவதை நான் பார்க்கப்போவதில்லை. ஒன்று ரோகித் – ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக விளையாட வேண்டும். அல்லது ராகுல் 3, 4வது இடங்களில் விளையாட வேண்டும்”

“6வது இடத்தில் ரோகித் சர்மா விளையாடுவது இந்திய அணிக்கு சிறப்பாக இருக்காது. ஏனெனில் நம்முடைய டாப் பேட்ஸ்மேன்கள் தான் ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கான தூண்கள். என்னை கேட்டால் ராகுல் – ஜெய்ஸ்வால் தொடர்ந்து துவக்க வீரர்களாக விளையாடலாம். ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் விளையாட வேண்டும்”

- Advertisement -

ஜுரேலுக்கு வாய்ப்பு:

“சுப்மன் கில் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். முதல் போட்டியில் பெரிய ரன்கள் குவிக்காத அவரை நீங்கள் அடுத்த போட்டியில் வெளியே உட்கார வைக்கலாம். அப்படி செய்தால் சுப்மன் கில் ஓப்பனிங்கில் விளையாடாமல் ஐந்தாவது இடத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். ஆனால் அது போன்ற சிக்கலான வலையில் நீங்கள் விழுந்தது போல் உணர்வீர்கள்”

இதையும் படிங்க: ஜாம்பவான் டான் பிராட்மேனின் 76 வருட வாழ்நாள் உலக சாதனையை.. சமன் செய்யப் போகும் கிங் கோலி

“ஜுரேலுக்கு பதிலாக சுப்மன் கில்லை இந்திய அணி விளையாட வைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஜுரேலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. எனவே அதே பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்களை செய்யாமல் விளையாடுவதே மீண்டும் வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement