
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களும் 80 ரன்களும் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். முன்னதாக சௌரவ் கங்குலி போல விராட் கோலி களத்தில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்த எப்போதும் தவறுவதில்லை.
குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அஞ்சாமல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் விராட் கோலி வல்லவராக அறியப்படுகிறார். அதே போல தம்மிடம் வம்பிழுக்கும் மிட்சேல் ஜான்சன், கேஷ்ரிக் வில்லியம்ஸ் போன்ற பவுலர்களுக்கு பேட்டால் அவர் பலமுறை பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி எப்போதுமே பவுலர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை கொண்ட வீரர் என ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக இலங்கைக்கு எதிரான (2008) அறிமுகமான ஒருநாள் தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி அரை சதமடித்தார். அப்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்த அஜந்தா மெண்டிஸை இன்னும் அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் என்று விராட் கோலி தம்மிடம் சொன்னதாக ஹர்பஜன் நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி தாதா பிளேயர். ஒரு முறை வீரர் சேவாக் காயம் அடைந்திருந்தார். அப்போட்டியில் அஜந்தா மெண்டிஸ் அனைவரையும் அவுட்டாக்கினார். அப்போது களமிறங்கிய விராட் கோலி இளம் பையனாக சுதந்திரமான எனர்ஜியுடன் விளையாடி அரை சதமடித்தார். அந்த இன்னிங்ஸை முடித்து விட்டு என்னிடம் வந்த அவர் பாஜி நான் எப்படி விளையாடினேன்? என்று கேட்டார்”
“அதற்கு நன்றாக விளையாடினீர்கள் என்று சொன்னேன். அப்போது “பாஜி நான் அவுட்டாகியிருக்கக் கூடாது. அவரை இன்னும் அடித்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவருடைய அந்த அணுகுமுறையை நான் விரும்பினேன். நாளடைவில் அவரிடம் மனநிலை, டயட் போன்றவை மாறியதை பார்த்தேன். அப்போதெல்லாம் நாம் மற்ற வீரர்களை போல் அல்லாமல் அனைவரும் நீண்ட காலம் நினைக்கும் அளவுக்கு சிறந்த வீரராக வரவேண்டும் என்ற அணுகுமுறையை விராட் கோலி கொண்டிருந்தார்”
இதையும் படிங்க: ரச்சின் ரவீந்திராவுக்காக சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் செய்துள்ள உதவி – இதனால் தான் சி.எஸ்.கேவை குடும்பம்னு சொல்றாங்க
“அதனால் இந்தப் பையன் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடி சதங்கள் அடித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் பின் ஆஸ்திரேலியாவில் அவர் அடுத்தடுத்த டெஸ்ட் சதங்கள் அடித்தார். அங்கே 400 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய நிலையிலும் அவர் தோல்விக்காக பயப்படாமல் போராடினார். அப்படிப்பட்ட அணுகு முறையை கொண்ட விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை விட்டுச் செல்வார்” என்று கூறினார்.