என்னோட கரியர்ல நான் பலமுறை இவரை ரொம்ப ஈஸியா அவுட் ஆக்கியிருக்கேன் – மனம்திறந்த ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போன்ற அணிகள் பரம எதிரிகளாக கருதப்படுவதால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அனல் தெறிக்கும். இது போன்ற அணிகள் களத்தில் விளையாடும்போது வெற்றிக்காக முழு மூச்சுடன் போராடும் என்பதால் அதை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள். அதேபோல் கிரிக்கெட்டில் ஒரு சில தரமான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளருக்கு இடையே அடிக்கடி போட்டி ரீதியிலான சண்டை நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாகும்.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar
Shoaib-Akhtar-Sachin-Tendulkar

எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மோதுவது உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இது போன்ற வீரர்கள் நேருக்கு நேர் பலபரீட்சை நடத்தும் போது பேட் மற்றும் பந்து ஆகிய இரண்டுக்கும் இடையிலான சம அளவு போட்டியை கண்டு களிக்கும் பொன்னான வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படும்.

- Advertisement -

ஒருதலைப்பட்ச வெற்றி:
அதே சமயம் அது போன்ற எல்லாத் தருணங்களின் இறுதியிலும் அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேனும் பந்து வீச்சாளரும் சம அளவில் வெற்றி காண்பதில்லை. எடுத்துக்காட்டாக ஜாம்பவான்கள் ஷேன் வார்னே மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இடையில் புள்ளிவிவரங்களின்படி சச்சின் டெண்டுல்கர் தான் வெற்றிகரமாக இருந்துள்ளார். அதேபோல் கிளென் மெக்ராத் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இடையில் நடந்த போட்டியில் மெக்ராத் தான் வெற்றிகரமானவராக இருந்துள்ளார்.

Sachin

அதாவது ஒரு சில சமயங்களில் 2 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் மோதிக்கொள்ளும் போது அதில் ஏதேனும் ஒருவர் மட்டுமே வெற்றிகரமாக இருப்பார்கள். அதிலும் ஒரு சில தரமான பேட்ஸ்மேன்கள் உலகில் எத்தனையோ டாப் பந்துவீச்சாளர்களை புலியாக உருவெடுத்து பந்தாடினாலும் ஒரு சில பவுலர்களுக்கு எதிராக பூனையாய் மாறி அவுட்டாகி விடுவார்கள். அந்த வகையில் கிரிக்கெட் கண்ட மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உலகில் எத்தனையோ பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து பல சாதனைகளைப் படைத்து ஜாம்பவான் என பெயர் பெற்றவர்.

- Advertisement -

ஹர்பஜனிடம் அடங்கும் பாண்டிங்:
அப்படிப்பட்ட புலியான அவர் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்க்கு எதிராக வரலாற்றில் பூனையாக செயல்பட்டார். சொல்லப்போனால் ஹர்பஜன் சிங்குக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 13 முறை அவுட்டான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 10 முறை அவுட்டாகி உள்ளார். இதன் வாயிலாக சர்வதேச போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கை அதிகமுறை அவுட் செய்த பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பெருமையையும் ஹர்பஜன்சிங் படைத்துள்ளார்.

Harbhajan Singh Ricky Ponting

இந்நிலையில் பல தருணங்களில் ரிக்கி பாண்டிங்கை அசால்டாக அவுட் செய்தது பற்றி ஹர்பஜன்சிங் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஒரு மகத்தான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. சொல்லப்போனால் களத்தில் விளையாடும் போதெல்லாம் அதிரடியாக செயல்பட்டு வெற்றிகரமாக இருக்க வேண்டும் என நினைப்பார். ஆனால் அவருக்கு எதிராக பந்து வீசியதில் இருந்து ஒரு பந்து வீச்சாளராக அவரிடம் நான் ஒன்றை கண்டுபிடித்தேன். அதாவது அவர் பந்தை தடுப்பாட்டம் (டிபென்ஸ்) ஆட முயலும்போது மிகவும் கடினமான கைகளை கொண்டுள்ளார்” என கூறினார்.

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் ஆட முயலும் போது நிறைய யுத்திகள் உள்ளது. அதிலும் குறிப்பாக சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது லேசாக (சாப்ட் ஹேண்ட்ஸ்) தடுக்க முயலவேண்டும். ஆனால் எப்போதும் ரிக்கி பாண்டிங் கடினமாக தடுக்க முயன்றதால் (ஹார்ட் ஹேண்ட்ஸ்) தமக்கு எதிராக அதிகமுறை அவுட்டானதாக ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

ricky

ஆல் டைம் கிரேட் வீரர்:
“எனவே அதுதான் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அவரின் தடுப்பாட்டம் எப்போதும் மிகச்சிறந்ததாக இருந்ததில்லை. அவர் எப்போதும் கடினமான கைகளுடன் தடுப்பாட்டம் ஆட முயன்றதே அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நான் வீசும் பந்துகளில் இருக்கும் சற்று அதிகப்படியான பவுன்சை எதிர்கொள்ள மற்ற பவுலர்களிடம் தடுமாறாத அளவுக்கு அவர் என்னிடம் தடுமாறினார்.

- Advertisement -

அவரை 11 – 12 முறை அவுட் செய்தது எனது அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். ஆனால் அதற்காக அவர் குறைந்த திறமையை கொண்ட வீரர் அல்ல. அவர் எப்போதுமே ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால் உலக அளவில் மிகச் சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவரை நான் தேர்வு செய்வேன்” என இது பற்றி ஹர்பஜன் சிங் மேலும் கூறினார்.

இதையும் படிங்க : சூரத்தில் பயிற்சியை துவங்கியும் இன்னும் அங்கு வராத முன்னணி வீரர் – சி.எஸ்.கே அணிக்கு விழுந்த அடுத்த அடி

என்னதான் தனது பந்துகளில் ரிக்கி பாண்டிங் தடுமாறினாலும் கூட அவர் எப்போதும் ஒரு லெஜன்ட் என ஹர்பஜன்சிங் பாராட்டினார். மேலும் சச்சின் டெண்டுல்கர் போன்ற உலகின் டாப் 5 தரமான பேட்ஸ்மேன்களின் பட்டியலில் அவரும் ஒருவராக உள்ளார் என புகழாரம் சூட்டினார்.

Advertisement