ரெய்னாவை தொடர்ந்து சி.எஸ்.கே அணியில் இருந்து விலக உள்ள நட்சத்திரம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Harbhajan
- Advertisement -

ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது என்று அறிவித்ததில் இருந்து தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் ஒரே கலவரமாக இருக்கிறது. முதலில் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு மட்டும் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதில் ரவிந்திர ஜடேஜா ஹர்பஜன் சிங் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை.

சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா, தீபக் சாகர், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் தனி தனியாக விமானத்தில் வைக்கப்பட்டு துபாய் அனுப்பப்பட்டனர். இதில் சி.எஸ்.கே அணியுடன் முன்னணி வீரர் ஜடேஜா வந்து இணைந்து கொண்டார். ஆனால், ஹர்பஜன்சிங் வரவில்லை.

- Advertisement -

அதன் பின்னர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் திடீரென கொரோனா வைரஸ் தொற்று புகுந்தது தீபக் சஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் உட்பட பதிமூன்று பேருக்கு இந்த வைரஸ் தொற்று உருவாகியது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னா திடீரென அணி நிர்வாகத்துடன் சிறிய சண்டை போட்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இந்தியாவிற்கு திரும்பி விட்டார்.

Harbhajan

அதற்காக அவர் தற்போது பல காரணங்களை கூறி வருகிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமிற்கு வந்து சேரவில்லை. அவர் வருவதாகவும் தெரிய வில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அவர் கூறுகையில்…

Harbhajan

ஹர்பஜன்சிங் ஒன்றாம் தேதி இங்கு வந்து அணியில் இணைந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் வரவில்லை தனது பயணத்தை நிறுத்தி வைத்துவிட்டார். அவர் வருகிறாரா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அவர் வருவது குறித்து ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை எந்த ஒரு தருணத்திலும் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறலாம். அப்படி ஒரு நிலைதான் தற்போது வரை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அந்த அதிகாரி.

Advertisement