- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதை தமிழிலே அறிவித்த ஹர்பஜன். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா ? – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிவருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஹர்பஜன் தற்போது தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். அதன்படி இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ள புதிய படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அந்த படத்தில் ஹர்பஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

டிக்கிலோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த தமிழ படத்தில் கேரக்டரில் ஹர்பஜன் நடிக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலேயே பதிந்து நன்றி தெரிவித்து ஹர்பஜன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி குறிப்பிடதக்கது.

- Advertisement -
Published by