பைனலில் என்னை நீக்கியதற்கு காரணம் இதுதான்..? – ஹர்பஜன் புலம்பல்..!

harbhajan
- Advertisement -

கடந்த இரு தினங்களாக ஐ.பி.எல் போட்டியில் வென்ற சென்னை அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் களமிறங்கிய சென்னை அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை(மே 27) நடந்த இறுதி போட்டியில் வென்று மூன்றாவது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை கைப்பற்றியது. இந்த இறுதி போட்டியில், தான் சென்னை அணியில் இடம்பெறாத காரணத்தை கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

Harbhajan1

- Advertisement -

ஒண்டரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த ஐ.பி.எல் 11 வது தொடர், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி வாகை சூடியது.

ஆனால், இந்த இறுதி போட்டியில், சென்னை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு அணியில் வாய்ப்பளிக்கபடவில்லை, கடந்த ஆண்டு வரை மும்பை அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்படார். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்த தொடரில் சீராக விளையாடாததால் இறுதி போட்டியில் இவருக்கு பதிலாக கரண் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

bhajii

இறுதி போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு பின் இதுகுறித்து ஹர்பஜன் தெரிவிக்கையில் “தோனி சரியாக முடிவெடுத்தார், அவருக்கு விக்கெட்டுகளை எடுக்கும் பந்து வீச்சாளர்கள் தேவைபட்டது. மேலும், இந்த தொடரில் விரல்களை பயன்படுத்தும் சூழல் பந்து வீச்சாளர்களை விட, மணிக்கட்டை பயன்படுத்தும் சூழல் பந்து வீச்சாளர்களே நாங்கள் அதிகம் கண்டுள்ளோம். ஆனால் இந்த நிலை கண்டிப்பாக அடுத்தாண்டு மாறும். வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருந்த கரனுக்கு ஒரு சபாஷ் “என்று தெரிவித்துள்ளார்.

Advertisement