இதுல கொஞ்சம் முன்னேறினா.. நீங்க தான் அடுத்த சேவாக்.. அபிஷேக்கிற்கு ஹர்பஜன் முக்கிய அட்வைஸ்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்தத் தொடரில் மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 135 ரன்கள் குவித்தார். மேலும் 2 விக்கெட்களும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவிடம் நல்ல லெக் ஸ்பின்னராக வருவதற்கான திறமை இருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே அதில் தன்னை மெருகேற்றி அபிஷேக் சர்மா நல்ல பகுதி நேர பவுலராக முன்னேற வேண்டும் என்று ஹர்பஜன் அறிவுறுத்தியுள்ளார். அதை செய்தால் சேவாக் போல வரும் திறமை அபிஷேக்கிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஹர்பஜன் அட்வைஸ்:

ஏனெனில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் திறமை அவரிடம் இருப்பதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் அதிகமாக பவுலிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அவருடைய சீம் பகுதி நன்றாக இருப்பதாக ஆரம்பம் முதலே அவரிடம் சொல்லி வருகிறேன். இருந்தும் அவர் தன்னுடைய பேட்டிங் அளவுக்கு பந்து வீச்சில் பயிற்சிகளை எடுப்பதில்லை”

“அதனால் இன்று உட்பட எப்போது அவரை சந்தித்தாலும் பவுலிங் பற்றியே பேசுவேன். ஏனெனில் பேட்டிங் அவருடைய முதல் காதல். அதில் அவர் பயிற்சியும் வேலையும் செய்ய வேண்டும். அதே சமயம் தன்னுடைய பந்து வீச்சிலும் அவர் முன்னேற வேண்டும். நல்ல லெக் ஸ்பின்னராக வருவதற்கு தேவையான அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது”

- Advertisement -

அடுத்த சேவாக்:

“தன்னுடைய நாளில் போட்டியை எதிரணியிடமிருந்து பறிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. டிராவிஸ் ஹெட் தற்போது அதைச் செய்கிறார். விவ் ரிச்சர்ட்ஸ், சேவாக் போன்ற வீரர்கள் போட்டியை தனியாக முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூடியவர்கள். அவர்களைப் போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபிஷேக் ஷர்மாவுக்கு இன்று அல்லது நாளை வாய்ப்பு கிடைக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கி வெற்றியை பறிக்கக்கூடிய சேவாக் போன்றவர் எப்போதும் உங்களுக்கு தேவை”

இதையும் படிங்க: இந்திய அணியை மிஸ் பண்றேன்.. விராட் கோலி செஞ்சதை மறக்க முடியாது.. ஷிகர் தவான் நெகிழ்ச்சி

“அது அபிஷேக் சர்மாவாக இருக்கலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி இங்கிலாந்து எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement