உலகக்கோப்பை ஜெயிச்சதும் அவரு போட்ட டேன்ஸ்ஸ அதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல – ஹர்பஜன் பகிர்ந்த தகவல்

Harbhajan
- Advertisement -

இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு தோனியின் தலைமையில் உலக கோப்பை தொடரில் களமிறங்கியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை அபாரமாக வீழ்த்தி 28 வருடங்களுக்குப் பின்னர் உலக கோப்பை தொடரை வென்றது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் இந்திய அணி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக இந்திய அணி அந்த தொடர் முழுவதும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த நாளை இன்றுவரை ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

worldcup

- Advertisement -

அதுவே சச்சின் டெண்டுல்கருக்கு முதல் உலகக் கோப்பை வெற்றி. தொடர்ந்து 5 உலக கோப்பை தொடரில் ஆடி ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வந்தார் சச்சின் டெண்டுல்கர். 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை அவருக்கு 6 ஆவது உலகக்கோப்பை இறுதியில் இந்த தொடரில் தான் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலகிலுள்ள அனைத்து பேட்டிங் சாதனைகளையும் படைத்து வந்திருந்தார் சச்சின். ஆனால் ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாமல் இருந்தார்.

இந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் இந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடைசியாக தோனி அடித்த அந்த வின்னிங் சிக்சருக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் ஒரு சின்ன குழந்தை போல துள்ளி குதித்து ஓடி வந்தார். அனைவரையும் கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

sachin

அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் மட்டுமே வந்தது. மேலும் கோப்பையை வென்ற பின்னர் அவர் யாருடனும் பேசவில்லை. அந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர் கொண்டாட நினைத்தார். இதன் காரணமாக அனைவருடனும் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்சிங்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல அரிய சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் அவரால் கேப்டனாக ஒரு உலக கோப்பை தொடரை கூட வெல்ல முடியவில்லை. மேலும் ஒரே ஒரு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடியுள்ளார் .இரண்டாவது முறை ஆடும்போது தான் தோனி அவருக்கான உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

yuvidhoni

அவரது இத்தனை ஆண்டு கிரிக்கெட்டில் களத்தில் மிகவும் சாந்தமாக காணப்படும் சச்சின் எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் காண்பிக்க மாட்டார். ஆனால் உலகக்கோப்பையை வென்ற அத்தருணத்தில் அவர் அவரை மறந்து மைதானத்தில் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் அவரை தங்களது தோளில் சுமந்து மைதானம் முழுவதும் வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement