கில்க்ரிஸ்ட்டால் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது – புலம்பிய ஹர்பஜன்

- Advertisement -

ஹர்பஜன்சிங் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடையேயான போட்டி எப்போதும் சுவாரசியம் மிகுந்ததாக காணப்படும். அவரது துவக்க காலத்திலிருந்தே ஆஸ்திரேலிய வீரர்களுடன் எப்போதும் ஆடுகளத்தில் சண்டையிடுவது, அவர்கள் குறித்த சர்ச்சையாக பேசுவது என்று ஆக்ரோசமாக அவர்களுடன் மோதி கொண்டிருப்பார். குறிப்பாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ்ஸை அவர் குரங்கு என திட்டியது அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

Harbhajan

- Advertisement -

இவ்வாறு பல சரித்திரங்கள் அவருக்கு ஆஸ்திரேலிய அணியுடன் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு ரெக்கார்டை வைத்திருக்கும் ஹர்பஜன் அந்த அணிக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.அப்போதெல்லாம் அவரது ஆட்டம் அதகளமாக இருந்தது. இந்த ஹாட்ரிக் விக்கெட்டில் கில்கிறிஸ்ட்டும் ஒருவர். ஆனால் தற்போது வரை அந்த விக்கெட் சரியானது இல்லை டிஆர்எஸ் இருந்தால் நான் அவுட் இல்லை என்று அதனை வைத்து கில்கிரிஸ்ட் புலம்பி வருகிறார் என்பது தனிக்கதை.

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தனது கடைசி ஐ.பி.எல் தொடரில் அவர் கேப்டனாக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து கில்கிறிஸ்ட் ஓய்வு பெற்றார். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் கில்கிரிஸ்ட். அவரது கடைசி போட்டி மும்பைக்கு எதிராக நடைபெற்றது. இதில் மும்பை அணி கிட்டத்தட்ட தோல்வியை தழுவும் வேலையில் ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்தது.

Gilchrist 1

மும்பை அணியின் வெற்றி இனி என்ன நடந்தாலும் நடக்காது என்ற முடிவுக்கு வந்த கில்க்ரிஸ்ட் தானே அந்த கடைசி ஓவரை வீச தீர்மானித்தார். அந்த ஓவரே அவர் சர்வதேச போட்டி மற்றும் உள்ளூர் போட்டியென அனைத்துவகையான போட்டிகளிலும் வீசிய ஒரே ஓவர். கீப்பிங் செய்ய பிரவீன் குமாரை நிறுத்திவிட்டு மும்பை அணியின் வீரரான ஹர்பஜன் சிங் பேட்டிங் பிடிக்க அவருக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் பந்துவீசினார்.

- Advertisement -

ஹர்பஜன் மைதானத்தில் எல்லைகள் சிறியது என்பதனாலும், பந்துவீசி இதுவரை அனுபவம் இல்லாத கில்க்ரிஸ்ட் பந்தை தூக்கி சிக்ஸர் அடிக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் அடித்த பந்து உயரே சென்று பவுண்டரி லைனில் இருந்த பீல்டர் கேட்ச் பிடித்து விட்டார். இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து தற்போது புலம்பும் வகையில் பேசியுள்ளார் ஹர்பஜன்சிங்.. இதுகுறித்து அவர் கூறுகையில்..

Gilly

அந்த மைதானத்தின் அளவை பார்த்து நான் சிக்சர் அடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் பவுண்டரி லைனில் இருக்கு அருகே கேட்ச் பிடித்து விட்டார்கள். இது எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. ஆனால் கில்கிரிஸ்ட்டை ஏற்கனவே பலமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன். மேலும் எனது விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவர் கங்னம் ஸ்டைல் டான்ஸ் ஆடி கொண்டாடியதை நான் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

Gilchrist

தனது வாழ்நாளில் ஒருமுறை கூட பந்துவீசாத ஒருவரிடம் ஆட்டம் இழந்துவிட்டோமே என்று தான் வருத்தப்பட்டதாக அவர் கூறினார். மேலும் தான் விக்கெட்டை விழுந்து வருத்தத்தில் இருந்தாலும் எனது விக்கெட்டை வீழ்த்தியதால் அவர் உற்சாக மிகுதியில் இருந்தார் என்றும் ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கில்க்ரிஸ்ட்டின் அதிர்ஷ்டத்தால் அவர் தனது வாழ்நாளில் முதலும் கடைசியாகவும் வீசிய பந்தில் விக்கெட்டுடன் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement