அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி ஜெயிக்குமா ? – ஹர்பஜன் பளீர் பேட்டி

Harbhajan
- Advertisement -

2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பை தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டிற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த உலககோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருப்பது கூடுதல் சிறப்பம்சம். சர்வதேச அணியான இந்திய அணி தற்போது விராட் கோலியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விராட் கோலி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகிறார்.

IND

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கூட 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இருப்பினும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தற்போது வரை ஐசிசி நடத்தும் தொடர்களில் ஒருமுறைகூட கோப்பை வென்றதில்லை. பலமுறை ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இந்தியிற் அணி அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில் தோற்று வெளியேறியுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இதைப்பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : “விராட்கோலி ஒரு மிகச்சிறந்த வீரர் என்றார். இவருடைய பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். விராட் கோலி பலமுறை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ind

இருப்பினும் தற்போது வரை இவரால் ஒரு ஐ.சி.சி கோப்பையை கூட பெற்றுத் தர இயலவில்லை. ஆனால் விராட் கோலி அதையும் கூடிய விரைவில் செய்து விடுவார். 2021 நடக்கும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி நிச்சயம் வெற்றி பெற்றுத் தருவார் என்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

Ind

இதன் மூலம் இந்திய அணி மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. தற்போது இந்திய அணியில் சிறந்த பவுலர்கள் இருக்கின்றனர். உலகளவில் இந்திய அணி டி20 போட்டிகளில் மிகவும் வலிமையான அணியாக திகழ்கிறது” என்று அவர் கூறியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement