தனி ஆளாக வெற்றிக்கு இவரால் வெற்றி பெற்றுத்தர முடியும். ஆர்.சி.பி அணி இவரை விடாது – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் 15 வது சீசனானது மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் துவங்க உள்ளது. இந்த 15 வது சீசனில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் இந்த 15 வது சீசனில் பங்கேற்கின்றனர். இதற்கு முன்னர் பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது.

bharat 1
bharat RCB

இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்ய காத்து இருக்கின்றன. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இம்முறை தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க காத்திருக்கின்றது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் தற்போது இந்த ஆண்டாவது கோப்பையை கைப்பற்றும் என்ற முனைப்பில் சில முக்கிய வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Ishan kishan

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆர்சிபி அணி நிச்சயம் இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன்-ஐ மெகா ஏலத்தின் போது தேர்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரால் நிச்சயம் தனியாளாக நின்று ஒரு அணிக்கு வெற்றியை தேடிக் கொடுக்க முடியும். குறைந்தது 30 பந்துகள் அவர் சந்திக்கும் வேளையில் 70 முதல் 80 ரன்கள் வரை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் அவர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என்றும் அவருக்காக ஒவ்வொரு அணியும் ஏலத்தில் போட்டி போடும்.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து தீடீரென வெளியேறிய 2 வீரர்கள் – காரணம் என்ன?

அதில் ஆர்சிபி அணி அவரை நிச்சயம் ஏலத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆர்சிபி அணிக்கு தற்போது அதிரடியான ஒரு துவக்க வீரர் அவசியம் என்பதனால் இவரை எடுக்க கடுமையான போட்டி நிலவும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறியுள்ளதால் இந்த சீசனில் புதிய கேப்டனுடன் பெங்களூரு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement