சென்னை மற்றும் மும்பை எப்போ மோதினாலும் இதே நிலைமை தான் – ஹர்பஜன் ஓபன் டாக்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. தற்போது வரை 12 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு அணிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

CskvsMi

- Advertisement -

அதன் காரணமாக இரு அணிகள் களத்தில் மோதும்போது ஆட்டம் எப்போதும் சூடு பறந்து கொண்டே இருக்கும். களத்தில் வீரர்களுக்கு பெரும் போட்டி இல்லை என்றாலும் வெளியே ரசிகர்களுக்கு பெரிய வாக்குவாதம், போட்டி இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆண்டுகள் ஆடிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறிய ஹர்பஜன்சிங் இந்த இரு அணிகள் மோதும் போது எவ்வாறு இருக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது…

முதன் முதலில் நான் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்த போது மிகவும் விசித்திரமாக இருந்தது. மும்பைக்கு எதிராக மோதும் போதெல்லாம் சென்னை அணியின் உடையை அணிந்து ஆடுவது எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. பிறகு அதனை பழகிவிட்டேன். ஆனால் இரு அணிகள் மோதும் போதெல்லாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஆகவே பார்க்கப்படும்.

harbhajan

அந்த அளவிற்கு சவாலானதாக இருக்கும். முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய சீசன் முழுவதும் எனக்கு விசித்திரமாக இருந்தது. இரண்டாவது சீசனில் அந்த அளவிற்கு இல்லை என்று கூறினார் ஹர்பஜன் சிங். பல ஆண்டுகளாக மும்பை அணிக்கு ஆடிவிட்டு தற்போது சென்னை அணியில் ஆடுவது விசித்திரமாக உள்ளது என்று ஹர்பஜன் கூறினார்.

Harbhajan

ஏற்கனவே சென்னை அணியில் கிடைக்கும் வரவேற்பு குறித்தும், சென்னை ரசிகர்கள் குடுக்கும் அன்பு குறித்தும் ஏற்கனவே ஹர்பஜன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் குறித்தும் பேட்டியினை அளித்திருந்தார். அது குறித்த பதிவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement