கோலி இல்லனா என்ன அவரோட இடத்துல இவர் சரியா விளையாடுவாரு. பயப்பட வேணாம் – ஹர்பஜன் ஓபன் டாக்

Harbhajan
Advertisement

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

Kohli

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் முழுமையாக கலந்துகொள்ளும் கோலி டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்குப் பின்னர் இந்தியா திரும்புகிறார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவ காலத்தில் அவருடன் இருப்பதற்காக பிசிசிஐ அனுமதியுடன் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் விடுப்பு எடுத்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.

- Advertisement -

எனவே விராட் கோலி இந்த மூன்று போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்பதால் அது குறித்த பேச்சுக்கள் நாளுக்குநாள் விவாதங்களாக தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதால் இந்திய அணிக்கு நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

pujarashot

ஆனால் கோப்பையை இழக்கும் அளவிற்கு மோசமான செயல்பாடு இந்திய வீரர்களிடம் இருக்காது. ஏனெனில் விராத் கோலியின் இடத்தை ஈடு செய்யும் அளவிற்கு அணியில் வீரர்கள் உள்ளனர். குறிப்பாக புஜாரா, ராகுல் ஆகியோர் இருப்பதால் கோலியின் இடத்தை நிரப்ப கூடிய பலம் வாய்ந்ததாக இந்திய அணி இருக்கிறது.

Rahul

ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 4 போட்டிகளில் விளையாடிய புஜாரா 521 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் ராகுல் 670 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். எனவே இவர்கள் இருவரும் இருக்கும் வரை கோலியின் இழப்பு பெரிதளவு இந்திய அணியை பாதிக்காது என்று ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement