டி20 உலககோப்பை தொடரில் இவங்க 2 பேரை சேக்காம இருக்கவே முடியாது – ஹர்பஜன் ஓபன் டாக்

Harbhajan
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான முதன்மை இந்திய அணி ஆனது தற்போது இங்கிலாந்தில் இருக்கும் வேளையில் இளம் வீரர்களை கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் அறிமுகப் போட்டியில் விளையாடிய இஷன் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவும் முக்கியமான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு இரண்டாவது போட்டியிலும் அரைசதம் அடித்து தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் நிச்சயம் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷான் கிஷன் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர் டி20 உலக கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத வீரராக அணியில் இடம் பெறுவார்.

ishan 1

மேலும் அவரது இயற்கையான ஆட்டத்தை விளையாட வைத்தால் அவர் மிகப்பெரிய இன்னிங்சை விளையாடி கூடிய திறன் படைத்தவர். இஷான் கிஷனுக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். ஏனெனில் அவர்கள் இருவரும் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் சீனியர் வீரர்களுக்கு பதிலாக இவர்கள் இருவரும் இடம் பிடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.

sky 1

சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி தேவையான நேரத்தில் விரைவாக ரன் குவிக்க கூடிய திறன் படைத்தவர்கள். எனவே இவர்கள் இருவரும் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement