எனக்கு கிரிக்கெட் இப்போது வேண்டாம். ஐ.பி.எல் தொடரை புறக்கணித்த சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

Harbhajan
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பீதியில் உறைந்து போயுள்ளது. கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இந்த வைரஸ் கிட்டத்தட்ட ஒரு லட்சம் உலக மக்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறது.

corona 1

- Advertisement -

ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது . தமிழகத்தில் தற்போது வரை 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதன் காரணமாக இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . உலகப் பொருளாதாரமே முடங்கிப் போயுள்ளது.ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இந்த தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறிதான் .

Harbhajan1

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கூறியதாவது : கொரோனாவுக்கு நடுவே கடந்த 15 நாட்களாக நான் கிரிக்கெட்டைப் பற்றி யோசிக்க தேவையில்லை.

- Advertisement -

மக்களின் நலனுக்கு முன்னர் கிரிக்கெட் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இப்படிப்பட்ட நெருக்கடியான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் நான் ஐபிஎல் கிரிக்கெட்டை பற்றி நினைக்கும் அளவிற்கு சுயநலக்காரன் கிடையாது. அதை பற்றி சிறிதும் யோசிக்கவே இல்லை மக்கள் ஆரோக்கியத்துடனும் மீண்டும் அதை வாழ்க்கையுடன் திரும்புவதே எனது நோக்கமாக இருக்கிறது.

harbhajan

மக்கள் நன்றாக இருந்தால்தான் விளையாட்டை பற்றி யோசிக்க முடியும். மக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இயல்பு நிலைக்குத் திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement