சென்னை சி.எஸ்.கே அணியுடனான உறவை முறித்துக்கொண்ட நட்சத்திர வீரர் – அதிர்ச்சி தகவல்

Harbhajan

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி பல நட்சத்திர வீரர்களை தங்கள் வசம் வைத்து ரசிகர்களின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

இதனையடுத்து சிஎஸ்கே அணியின் மீது அதிகப்படியான விமர்சனங்களும், ரசிகர்கள் சற்று மன வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் சி.எஸ்.கே அணிக்கான ஆதரவு இன்றுவரை சற்றும் குறையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டு மீண்டும் மற்ற அணிகளால் வாங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்களை தக்க வைப்பதற்கு உரிமை உள்ளது. இதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

Harbhajan

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் சென்னை அணி உடனான தனது உறவை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : சென்னை அணியுடனான எனது காண்ட்ராக்ட் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவம் கடந்த சில ஆண்டுகளாக மறக்கமுடியாத நினைவுகளும், சில நல்ல நண்பர்களும் எனக்கு சிஎஸ்கே அணியில் இருந்ததுள்ளனர்.

- Advertisement -

இவை அனைத்திற்கும் நன்றி. அணி நிர்வாகத்தினர், ரசிகர்கள் மற்றும் ஸ்டாப்ஸ் என அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்தும் ஐக்கிய அரபு அமீரகம் செல்லாத ஹர்பஜன்சிங் இதன் காரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.