- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே போட்டியுடன் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு இப்படி நடந்தது அநியாயம் – ஹர்பஜன் சிங் கருத்து

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிக ரன்களை குவித்த வீரராக முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியினை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனால் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ள அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரது மத்தியிலும் இருந்து ஆதரவுகள் குவிந்தன.

சாய் சுதர்சனுக்கு நடந்தது அநியாயம் : ஹர்பஜன் சிங் கருத்து

பின்னர் அவருடைய பேட்டிங் டெக்னிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு இருந்ததால் நிர்வாகமும் அவர் மீது நம்பிக்கை வைத்து டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்பையும் வழங்கியது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

அப்படி அறிமுகமாகன அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்களையும் குவித்தார். இப்படி முதல் போட்டியிலேயே சற்று தடுமாற்றமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அவர் பெஞ்ச் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் அனுபவ வீரரான கருண் நாயர் விளையாடியிருந்தார்.

ஆனாலும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்த கருண் நாயர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தாத வேளையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டு மீண்டும் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திற்கு வரவேண்டும் என்ற பேச்சுகள் தொடர்ந்து நிலவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : நானும் இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் விளையாட சாய் சுதர்சனை தான் பரிந்துரை செய்வேன். ஏனெனில் ஒரு இளம் வீரருக்கு இப்படி ஒரு வாய்ப்பை மட்டுமே வழங்கி அவரை தூக்கி எறிவது சரி கிடையாது. அவருக்கு மூன்றாம் இடத்தில் விளையாட குறைந்தது மூன்று போட்டிகளாவது வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே அவரிடம் இருக்கும் திறமை வெளிப்படும்.

இதையும் படிங்க : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுகமாக வாய்ப்பு.. பயிற்சியில் நடந்தது என்ன? – விவரம் இதோ

அதை தவிர்த்து கருண் நாயருக்கு அந்த இடத்தை வழங்கி அதில் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். என்னைப் பொறுத்தவரை இளம் வீரரான சாய் சுதர்சனிடம் நல்ல திறமை உள்ளது. அவரை இந்திய அணியின் நிர்வாகம் ஆதரிக்க வேண்டும். முதல் போட்டியில் கருண் நாயரை தாண்டி சாய் சுதர்சன் விளையாடினார். அதேபோன்று இனிவரும் இரண்டு போட்டிகளிலும் கருண் நாயரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சாய் சுதர்சன் விளையாட வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -