4 ஆவது டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுகமாக வாய்ப்பு.. பயிற்சியில் நடந்தது என்ன? – விவரம் இதோ

Anshul Kamboj
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள வேளையில் நாளை மறுதினம் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல்வேறு இந்திய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

4 ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் அன்ஷுல் கம்போஜ் :

அதிலும் குறிப்பாக ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயமடைந்துள்ளதால் அவர்கள் இருவரும் நான்காவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து நட்சத்திர ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டியும் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இணைந்துள்ள இளம் வீரரான அன்ஷுல் கம்போஜ்க்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய ஏ அணியுடன் பயணித்து இங்கிலாந்து மண்ணில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்த அவர் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்ட சில தினங்களிலேயே அறிமுக வாய்ப்பினை பெற இருப்பது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் 24 வயதான ஹரியானாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் ஏற்கனவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய ஏ அணிக்காகவும் இங்கிலாந்து மண்ணில் அற்புதமாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியில் இணைந்துள்ள அவர் இன்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலின் மேற்பார்வையில் பந்துவீசி பயிற்சி செய்தார்.

- Advertisement -

அப்போது அவருடன் இணைந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் பந்துவீசியிருந்தனர். ஆனால் அன்ஷுல் கம்போஜ்ஜின் பந்துவீச்சு பயிற்சியாளர் குழுவின் கவனத்தை ஈர்த்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது உறுதி என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே முதன்மை பவுலர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஆடப்போவது உறுதி.

இதையும் படிங்க : பும்ரா 4 ஆவது போட்டியில் நிச்சயம் ஆடுவார்.. பவுலிங் காம்பினேஷன் எப்படி இருக்கும்? அப்டேட் வழங்கிய – முகமது சிராஜ்

எனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடுவாரா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது என்று கூறலாம். ஏனெனில் இந்த தொடரில் அவர் மோசமான ரன் எக்கானமியுடன் பந்து வீசியதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement