வணக்கம் டா மாப்ள சி.எஸ்.கே டீம் ல இருந்து. இது உனக்கு தான்டா – அசத்தலாக ட்வீட் போட்ட ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.#

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் நீக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அணிக்கு ஆடிவரும் ஹர்பஜன்சிங் இந்த வருடமும் மீண்டும் சென்னை அணியில் நீடிக்கிறார்.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹர்பஜன்சிங் செய்த டுவிட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் பதிவிட்ட வீட்டில் வணக்கம் டா மாப்பிள்ளை சிஎஸ்கே டீம் ல இருந்து என்று ஆரம்பித்து ட்வீட் போட்டுள்ளார். டிக் டாக் பார்த்த பலருக்கும் தெரிந்த ஒரு டயலாக் வணக்கம் டா மாப்ள தேனியிலிருந்து என்று ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்தது.

அதனை தொடர்ந்து அதே பாணியில் ஹர்பஜன்சிங் போட்ட ட்வீட் பிகில் பட வசனமும் அமைந்துள்ளதால் இந்த ரசிகர் மத்தியில் இப்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement