ஜடேஜா, கே.எல் ராகுல் இல்லாமல் 15 பேர் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை அறிவித்த – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்திய அணி பெற்ற தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது மட்டுமில்லாமல் இந்திய அணியின் மீது பெரிய விமர்சனம் எழவும் மிக முக்கியமான காரணமாக மாறியது.

சாம்பியன்ஸ் டிராபி அணியை அறிவித்த ஹர்பஜன் :

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், அதன்பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இறுதிப்போட்டி வரை சென்று இந்திய அணி தவறவிட்டது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது.

ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மட்டும் இந்திய அணியை அறிவிக்க கூடுதல் அவகாசத்தை கேட்டு ஐசிசி-யிடம் முறையிட்டது. இதன் காரணமாக இன்னும் ஒரு சில தினங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது 15 பேர் கொண்ட உத்தேச அணியை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தனது விருப்ப வீரர்களை வைத்து 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாமல் அனுபவமும், இளமையும் கலந்த ஒரு அணியை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அணியாவது :

இதையும் படிங்க : உங்க தரத்தை நிரூபிச்சு காட்டுவதே இதுக்கெல்லாம் ஒரே கம்பேக் வழி.. ரோஹித், கோலி பற்றி ஹர்பஜன்

1) ரோஹித் சர்மா, 2) விராட் கோலி, 3) சுப்மன் கில், 4) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 5) திலக் வர்மா, 6) ரிஷப் பண்ட், 7) சஞ்சு சாம்சன், 8) ஹார்டிக் பாண்டியா, 9) அக்சர் படேல், 10) நிதீஷ் குமார் ரெட்டி, 11) குல்தீப் யாதவ், 12) முகமது ஷமி, 13) ஜஸ்ப்ரீத் பும்ரா, 14) முகமது சிராஜ், 15) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement