பும்ராவை தாண்டி நம்பர் 1 பவுலரா இவர் வருவாரு. அதற்கான நேரம் சீக்கிரம் வரும் – ஹர்பஜன் ஓபன்டாக்

Harbhajan
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாட இருப்பதால் இந்திய அணிக்கு அங்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

iyer

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பௌலிங் யூனிட் குறித்து சில கருத்துகளை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

தென்ஆப்பிரிக்க அணியில் ரபாடா, நோர்க்கியா, லுங்கி நெகிடி ஆகியோர் இருப்பார்கள். அதேபோன்று இந்திய அணியில் பும்ரா, ஷமி இருவரும் தானாக தேர்வாகி விடுவார்கள். அதே நேரத்தில் அஷ்வின், ஜடேஜாவும் இணைவது உறுதி. ஐந்தாவதாக நான் நிச்சயம் சிராஜ்ஜை-தான் தேர்வு செய்வேன்.

siraj

ஏனெனில் அவர் இந்தியாவின் நம்பர் 1 பவுலராக வருவதற்கு நேரம் விரைவில் வரும். அவர் ஒரு மிகச் சிறப்பான பவுலர் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பவுலிங்கில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மேலும் டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட சிராஜ் நல்ல நம்பிக்கை பெற்று தற்போது எந்த வடிவத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் தனது பெஸ்ட்டை வெளிக்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் இருக்கும் வரை நிச்சயம் ரஹானே புஜாராவுக்கு இடமுண்டு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

இதே போன்று அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இந்தியாவின் நம்பர் 1 பவுலராக விரைவில் பும்ராவைத் தாண்டி தன்னுடைய தடத்தைப் பதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement