அவர் இருக்கும் வரை நிச்சயம் ரஹானே புஜாராவுக்கு இடமுண்டு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இருப்பினும் இந்த தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரது மோசமான பார்ம் தொடர்ந்ததால் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்க தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அணியின் மூத்த வீரர்களாக இருந்தும் கடந்த பல போட்டிகளாகவே அவர்கள் இருவரும் ரன் குவிக்க தடுமாறி வருகிறார்கள்.

Pujara

- Advertisement -

இதன் காரணமாக அவர்கள் இனியும் அணிக்கு தேவைதானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் இளம் வீரர்களை சேர்ப்பதன் மூலம் அணிக்கு வலு சேர்க்க முடியும் என்றும் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இடம் பெறுவார்களா ? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை நான் நன்கு அறிந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன். என்னை பொருத்தவரை ரஹானே மற்றும் புஜாராவிற்கு தென்னாப்ரிக்க தொடரில் நிச்சயம் டிராவிட் வாய்ப்பினை வழங்குவார்.

dravid 1

ஏனெனில் ஏற்கனவே முயற்சிக்க பட்ட ஒரு பிளான்தானை தான் டிராவிட் பின்பற்றுவார். அதுமட்டுமின்றி ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பல போட்டிகளில் இந்திய அணிக்காக அவர்கள் விளையாடி உள்ளதால் அவர்களை தற்போதைக்கு அணியில் இருந்து நீக்க டிராவிட் விடமாட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் 19 வயதான இவரை சேருங்கள். இவர் ஒரு பக்கா டெஸ்ட் பிளேயர் – டேனிஷ் கனேரியா

அதே வேளையில் தொடர்ந்து அவர்கள் இருவரிடத்திலும் சிக்கல் இருக்கும்பட்சத்தில் மாற்றம் குறித்து யோசிப்பார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதன் காரணமாக தென்னாப்ரிக்க தொடரில் நிச்சயம் அவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement