
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடந்த பல தொடர்களாக தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தடுமாறி வரும் அனுபவ வீரரான விராட் கோலிக்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கெதிராக விளையாடிய விராட் கோலி 38 பந்துகளை சந்தித்து வெறும் 22 ரன்கள் மட்டுமே குவித்தார். அதிலும் குறிப்பாக முதல் ரன்னை அடிக்கவே 10 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார். இப்படி முதல் போட்டியிலேயே விராட் கோலி தடுமாற்றத்தை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துபாய் ஆடுகளத்தில் விராட் கோலி எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அவருக்கு அறிவுரை மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றை வழங்கி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் எவ்வளவு சாதனையை செய்திருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிப்பதை விடாமல் செய்ய வேண்டும்.
ஏனெனில் உங்களது ஆட்டத்தை ரசிக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேபோன்று நீங்கள் ரன் அடிக்கும்போது அவர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உணர்கிறேன். இதிலிருந்து சில யுத்திகளை மாற்றிக்கொண்டு மீண்டும் மிகச் சிறப்பாக ரன் குவிக்க முயல வேண்டும்.
ஒருவேளை நீங்கள் பார்மில் இல்லை என்றால் அதிக நேரம் களத்தில் இருந்து பந்துகளை சந்தித்து ரன் சேர்க்க வேண்டும். ஆனால் அதிக நேரம் செலவிடும் போது சிக்கலில் சிக்கினால் நிச்சயம் அது உங்களை ஆட்டமிஷக்க வைக்கும். எனவே நீங்கள் புதிய முயற்சிகளை எடுத்தாக வேண்டும் நிச்சயம் நீங்கள் ஒரு சாம்பியன் வீரர் தான்.
இதையும் படிங்க : தோல்வியை சந்தித்தது மாட்டுமில்லாமல் தண்டனையையும் பெற்ற பாகிஸ்தான் அணி – விவரம் இதோ
எனவே இதிலிருந்து வெளிவர வேண்டிய அனைத்து வழிகளும் உங்களுக்கு தெரியும். மனதில் தேவையில்லாத சிந்தனைகளை நீக்கிவிட்டு சுதந்திரமாக இயல்பாக உங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் நிச்சயம் உங்களால் பிரகாசிக்க முடியும். இல்லையெனில் நீங்கள் அழுத்தத்தில் சிக்க வேண்டிய நிலையும் சந்திக்க நேரிடும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.