ஹர்பஜன் புது ஜெர்ஸி நம்பர் வெளிவந்தது ? நம்பரோட Special என்ன தெரியுமா ?

- Advertisement -

இந்திய அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் மும்பை அணிக்காக கடந்த பத்து சீசனிலும் விளையாடி வந்தார்.இம்முறை ரூபாய் 2கோடிக்கு சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த காலங்களில் 3ம் நம்பர் ஜெர்சியில் விளையாடி வந்தவர் தற்போது சென்னை அணிக்கு மாறியுள்ள நிலையில் அவரது ஜெர்சி எண்ணும் மாறியுள்ளது.

harbhajan

- Advertisement -

பொதுவாக வீரர்கள் என்னதான் தன் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் அதிர்ஷடத்தையும் ராசியையும் நம்புவார்கள். அப்படிதான் ஹர்பஜன்சிங்கிற்கு எண்3 இவ்வளவு காலமும் ராசியான எண்ணாக இருந்துவந்தது.தற்போது சென்னை அணிக்காக விளையாடவுள்ள ஹர்பஜன்சிங்கின் புது ஜெர்சி எண் 27. இந்த எண்ணும் ஹர்பஜன்சிங்கிற்கு பிடித்த ஸ்பெஷலான எண் தானாம்.

அதனால் தான் நேற்று இரவு டிவிட்டரில் “27.. yes a very special number for me ! ❤ new number new journey .. let the party begin! #whistlepodu,” என்று பதிவிட்டிருந்தார். இதற்கான காரணம் என்ன தெரியுமா! ஹர்பஜன்சிங்கின் மகள் பிறந்த தேதி தான் 27ஆம். 27-07-2017 அன்று தான் ஹர்பஜன்சிங்கின் மகள் பிறந்ததேதி.

இதனால் தான் ஹர்பஜன்சிங் இன்னும் அதிகப்படியான மகிழ்ச்சியில் வலம்வருகின்றாராம்.

Advertisement