CSK : சி.எஸ்.கே-வில் ஏற்கனவே 3 வீரர்கள் வெளியேறிய நிலையில். மீண்டும் ஒருவர் வெளியேற்றம் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணியும்

msdhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

karthik

- Advertisement -

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது கொல்கத்தாவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை அணியில் இருந்து மற்றொரு வீரர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கழுத்து வலியால் அவதிப்படுவதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக லுங்கி நிகிடி மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் அணியில் இருந்து விலகினார்.

Harbhajan

அதன்பிறகு பிராவோவும் காயத்தால் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் சென்னை அணி சுழற்பந்துவீச்சினை மட்டுமே நம்பி இருந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங் இன்றைய போட்டியில் ஆடாததால் தாக்கூர் மற்றும் தீபக் சாகர் ஆகியோரே முதன்மையான பந்துவீச்சாளராக திகழ்வார்கள். அவர்களுடன் ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் பந்துவீச உள்ளனர்.

Advertisement