- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பெருசா சாதிக்காத அவங்கல்லாம் விராட், ரோஹித்தை எடை போடுறது வேதனையா இருக்கு.. ஹர்பஜன் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட முயற்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக அவர்களால் 2027இல் 38, 39 வயதில் அசத்த முடியாது என்று தேர்வுக்குழு கருதுகிறது. அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்காக அசராத அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பெரிய ரன்கள் குவித்து தங்களுடைய தரத்தை நிரூபித்து வருகிறார்கள்.

- Advertisement -

சாதிக்காத நபர்கள்:

கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தன்னை கழற்றி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார். நடைபெற்று வரும் தென்னாபிரிக்க தொடரில் அடுத்தடுத்த சதங்கள் அடித்த விராட் கோலி தன்னை கழற்றி விடத் துடிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் விராட், ரோஹித் சர்மாவுக்கு நிகராக சாதிக்காதவர்கள் அவர்களை குறைத்து மதிப்பிடுவது வேதனையளிப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இது பற்றி கம்பீர், அகர்கர் ஆகியோரை மறைமுகமாக அவர் விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஒரு வீரராக வீரராக விளையாடியுள்ள எனக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்துள்ளன. என்னுடைய நிறைய சக வீரர்களுக்கும் இப்படி நடந்துள்ளது துரதிஷ்டவசமானது. அதைப் பற்றி நாங்கள் பேசி விவாதிப்பதில்லை”

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:

“விராட் கோலி போன்ற வீரர் இப்போதும் வலுவாக விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விராட், ரோஹித் ஆகியோரின் வருங்காலத்தை அதிகம் சாதிக்காக நபர்கள் நிர்ணயிக்க வேண்டிய நிலைமை இருப்பது கொஞ்சம் துரதிஷ்டவசமானது. அவர்கள் வலுவாக மட்டும் விளையாடவில்லை. சாம்பியன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கும் வகையில் விளையாடுகிறார்கள்”

இதையும் படிங்க: எங்ககிட்ட எல்லாத்துலயும் பேலன்ஸ் இருக்கு.. வெறியுடன் வரும் இந்தியாவை வீழ்த்துவோம்.. தெ.ஆ வீரர் பேட்டி

“எனவே சரியான முன்னுதாரணத்தை உருவாக்கி வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பாராட்டுக்கள்” என்று கூறினார். மொத்தத்தில் தொடர்ச்சியாக அசத்தும் பட்சத்தில் விராட், ரோஹித் ஆகியோர் உலகக் கோப்பையில் விளையாடுவதை தேர்வுக்குழு அல்லது பயிற்சியாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -