ஹர்பஜன்சிங்கின் மல்யுத்த ஆசை.! தீர்த்து வைத்த WWE சூப்பர்ஸ்டார் யார் -வீடியோ.!

- Advertisement -

இந்திய மக்களுக்கு கிரிக்கெட்டை போல அதிகம் பரிட்சியமானது wwe என்ற சண்டை போட்டி தான். என்னதான் அது ஒரு போலியான சண்டை போட்டி என்றாலும், இந்திய ரசிகர்களிடம் இதற்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. சமீபத்தில் wwe புகழ் கிரேட் காளியுடன் ஆர்ம் வேரிஸ்ட்லிங் எனப்படம் கை மல்யுத்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடுபட்டுளளார்.

harbajan

- Advertisement -

wwe வீரரான காளியும், ஹர்பஜன் ஆகிய இருவருமே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால் இவர்கலுக்கென்று ஒரு சொந்த மாநில பந்தம் எப்போதும் இருக்க செய்கிறது. சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்த போது நட்பு ரீதியாக ஆர்ம் வேரிஸ்ட்லிங் எனப்படும் கை மல்யுத்தம் என்ற பல பரிட்சையில் மோதிக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட விடியோவை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . ஆனால், இவர்கள் இருவரும் மோதிய இந்த சவாலில் யார் வெற்றி பெற்றது என்று தெரியவில்லை, ஏனெனில் ஹர்பஜன் ஒரு சில நொடிகள் இருக்கும் வீடியோ பதிவை மட்டும் தான் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement