ஐ.பி.எல் போட்டி இல்லைனா கவுண்டி போட்டியில் விளையாடுவேன். விளையாடாம மட்டும் இருக்க முடியாது – இந்திய வீரர் ஆதங்கம்

- Advertisement -

இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நிரந்தர வீரராக இருப்பவர் 26 வயதான ஹனுமா விஹாரி தற்போது வரை இவர் 9 டெஸ்டில் விளையாடி ஒரு சதம், 4 அரை சதம் என 552 ரன்கள் சேர்த்துள்ளார். ஆந்திராவை சேர்ந்தவ இவர் தற்போது இந்திய அணியில் லஷ்மணன் இடத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

கொரோனா பாதிப்பினால் உலக கிரிக்கெட் ஆட்டம் கண்டிருக்கும் இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்த சீசனில் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி தொடர்களில் எப்படியாவது 4 போட்டிகளில் விளையாட வேண்டும் என திட்டத்தில் இருந்தேன். எந்த அணிக்கு ஆடுவேன் என்பதை தற்போது வெளியில் சொல்லக்கூடாது.

ஆனால் தற்போது நடைபெறும் பிரச்சனையால் அதுவும் தடைபட்டு விட்டது. கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்பதால் கரோனா கட்டுக்குள் வந்தவுடன் அந்தப் போட்டிகளில் என்னால் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் ஆடினால் நிறைய கற்றுக் கொள்ளும் அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஹனுமா விஹாரி.

Vihari-1

இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுவது இந்திய வீரர்களுக்கு புதிதல்ல முன்னதாக சச்சின் டெண்டுல்கர் ,கௌதம் கம்பீர், இசாந்த் சர்மா, அணில் கும்ப்ளே ,ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் இங்கிலாந்து கவுண்டி அணிக்காக ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இவர் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதால் ஐ.பி.எல் தொடரில் கூட ஆடுவது கிடையாது. உள்ளூர் போட்டி, ரஞ்சி போட்டி மற்றும் கவுண்டி போட்டி என அனைத்திற்குமே முக்கியத்துவம் அளித்து விளையாடி வருகிறார்.

Vihari

மேலும் டெஸ்ட் அணியில் விளையாடி இவர் மற்ற பார்மேட்டுக்கும் ஏற்றவாறு தன்னை தயார் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் தனது ஆட்டத்தை நிரூபித்து இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்க காத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement