அந்த மாதிரி ப்ளேயர்ஸ கொடுத்தா நான் என்ன செய்ய முடியும்? என்சிஏ’வை வெளிப்படையாக விமர்சித்த ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. அதை விட இத்தொடரில் இந்தியா தோற்ற விதம் தான் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்தும் கடைசி நேரத்தில் வங்கதேசத்தின் 10வது ஜோடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு சொதப்பிய இந்திய பவுலர்கள் 2வது போட்டியிலும் ஆரம்பத்திலேயே 6 விக்கெட்களை எடுத்த போதிலும் 7வது ஜோடி 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தட்டிப் பறிக்கும் அளவுக்கு வள்ளல் பரம்பரையாக செயல்பட்டனர்.

Bangladesh

- Advertisement -

அப்படி கையிலிருந்த வெற்றி பறிபோவதற்கு விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற முக்கிய நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்களும் சொதப்பலாக செயல்பட்டு தங்களது பங்காற்றினார்கள். வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் இப்படி மோசமாக தோற்ற இந்தியா சமீபத்திய டி20 உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சந்தித்த தோல்விகளில் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

என்னமோ நடக்குது:

இதனால் 2023 உலக கோப்பையும் நமக்கு கிடையாது என்று வேதனையைடைந்துள்ள இந்திய ரசிகர்களுக்கு காயம் என்ற வார்த்தை அதை விட வேதனையாக அமைந்து வருகிறது. ஏனெனில் இந்த தொடரில் அறிமுகமான குல்தீப் சென் அறிமுகப் போட்டியுடன் காயமடைந்து வெளியேறிய நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் காயமடைந்து மீண்டும் குணமடைந்து மீண்டும் டி20 உலக கோப்பைக்குப் முன் காயமடைந்து மீண்டும் குணமடைந்து வந்த தீபக் சஹர் மீண்டும் காயமடைந்து வெளியேறியுள்ளார்.

Deepak Chahar 1

இது போக ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா என முக்கிய வீரர்கள் சமீப காலங்களில் மீண்டும் மீண்டும் காயமடைந்து வெளியேறுகிறார்கள். பொதுவாக இது போல் காயமடையும் வீரர்கள் குணமடைவதற்கு நேராக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார்கள். அங்கு 100% முழுமையாக குணமடைந்து விட்டார் என்று சான்றிதழ் வழங்கிய பின்னரே அவர்களால் இந்தியாவுக்காக விளையாட முடியும். ஆனால் சமீப காலங்களில் முக்கிய தொடருக்காக விளையாட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக குணமடைந்து விட்டார் என்ற சான்றிதழுடன் முக்கிய வீரர்கள் அங்கிருந்து வருவதாலேயே விரைவில் மீண்டும் காயமடைந்து வெளியேறுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் 3வது போட்டியில் பந்தை பிடிக்கும் போது ரத்தம் வரும் அளவுக்கு காயத்தை சந்தித்த ரோகித் சர்மா தாம் உட்பட யாராக இருந்தாலும் 100% மீண்டும் குணமடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு விளையாட அனுமதிக்க வேண்டும் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியை விமர்சித்துள்ளார். ஏனெனில் முழுமையாக குணமடையாத தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் மீண்டும் காயமடைந்து வெளியேறும் போது எப்படி நிலையான அணியை அமைத்து வெற்றி பெற முடியும் என்ற வகையில் 2வது போட்டிக்குப் பின் ஆதங்கத்துடன் அவர் பேசியது பின்வருமாறு.

Rohit-Sharma-1

“எங்களது அணியில் நிச்சயமாக காயங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளது. அதன் அடியில் சென்று பார்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது என்பது எனக்கும் உறுதியாக தெரியவில்லை. நாம் காயமடையும் வீரர்களை கண்காணிக்க முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் இந்தியாவிற்கு வரும் போது 100% முழுமையாக குணமடைந்திருக்க வேண்டும் என்பது முக்கியம். உண்மையில் 100% க்கும் அதிகமாக குணமடைந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அடுத்த போட்டியிலும் இதுதான் நடக்கும். இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த – வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ்

“எனவே அதை நாம் கவனிக்க வேண்டும். நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் போது வீரர்களின் பணிச்சுமையை கண்காணிக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் முழுமையாக குணமடையாமல் அரைகுறையான வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனெனில்
நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெரும் பெருமையும் மரியாதையும் இருக்கிறது. அதனால் அவர்கள் போதுமான தகுதியுடன் இல்லாவிட்டால் அது சிறந்ததல்ல. எனவே நாம் என்சிஏ அடிப்பகுதிக்குச் சென்று இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement