இதே மாதிரி செயல்பட்டால் கபில் தேவை முந்த வாய்ப்பிருக்கு – பாண்டியாவை பாராட்டும் முன்னாள் வீரர்

Kapil
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலாவதாக பங்கேற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் மட்டுமே செய்ய முடிந்தது. இருப்பினும் அதன்பின் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் தடுமாறினாலும் அபாரமான பந்து வீச்சால் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே சாய்த்து வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா வெல்வதற்கு ஆல்-ரவுண்டராக ஹர்டிக் பாண்டியா முக்கிய பங்காற்றினார் என்றே கூறலாம். ஏனெனில் முதல் டி20 போட்டியில் 51 ரன்கள் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைத்த அவர் 2-வது போட்டியிலும் 12 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து 2 போட்டிகளை வென்று ஆரம்பத்திலேயே இந்தியா தொடரை கைப்பற்ற துருப்பு சீட்டாக செய்யப்பட்டார். அதன்பின் நடந்த ஒருநாள் தொடரிலும் 3 போட்டியில் 100 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் எடுத்து மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு இந்தியா கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

பழைய பாண்டியா:
குறிப்பாக மான்செஸ்டரில் நடந்த கடைசி போட்டியில் 72/4 என இந்தியா தடுமாறியபோது ரிஷப் பண்ட் உடன் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 71 (55) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்டதால் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என இந்திய ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

Hardik Pandya 1

ஆனால் 2019 உலக கோப்பைக்கு பின்பாக ஏற்பட்ட காயத்தால் பந்துவீச தடுமாறிய அவரை நம்பி தேர்வு செய்த தேர்வு குழு துபாயில் நடந்த 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கியது. அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியும் அவரை கழற்றி விட்ட நிலையில் 15 கோடிக்கு தம்மை வாங்கிய குஜராத்துக்கு கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அபாரமாக செயல்பட்டு 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று தன்னை நிரூபித்துக் காட்டினார்.

- Advertisement -

அடுத்த கபில் தேவ்:
அதனால் அதே தேர்வுக்குழு மீண்டும் தாமாக முன்வந்து அவரை தேர்வு செய்த நிலையில் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய அவர் அயர்லாந்து தொடரில் கேப்டனாகவும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்து தற்போது இங்கிலாந்து தொடரிலும் அட்டகாசமாக செயல்பட்டுள்ளார்.

Jaffer

குறிப்பாக மான்செஸ்டர் போட்டிக்குப் பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் பழைய பன்னீர்செல்வமாக நல்ல பார்முக்கு திரும்பியுள்ள பாண்டியா இதே போல் செயல்பட்டால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஜாம்பவான் கபில் தேவ் சாதனைகளை முந்துவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி 3-வதுபோட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கபில் தேவ் சாதனைகளை தொடுவதற்கான திறமை நிச்சயமாக அவரிடம் உள்ளது. இருப்பினும் கபில் தேவ் மிகப்பெரிய பெயர் என்பதால் அவரை தொடுவார் என்று இப்போதே உறுதியாக கூற முடியாது. ஆனால் தற்போது போலவே பந்து வீசினால் நிச்சயம் அவரால் முடியும். ஏனெனில் ஏற்கனவே அபாரமான பேட்டிங் திறமை பெற்றுள்ள அவர் இதேபோல் அடுத்த 5 – 7 வருடங்கள் விளையாடினால் கபில் தேவை நெருங்க முடியும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல கபில்தேவ் என்பவர் மிகப் பெரிய ஜாம்பவான் என்ற நிலைமையில் அவரை தொடுவது பாண்டியாவுக்கு கடினமான ஒன்றாகும். இருப்பினும் சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்கு தானே என்ற வகையில் 1983 உலக கோப்பையை வென்ற ஜாம்பவான் கபில்தேவ் 198 ஒருநாள் இன்னிங்சில் 3783 ரன்களையும் 253 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : மகத்தான யுவி – தோனி பார்ட்னர்கள் மாதிரி வருவாங்க, பண்ட் – பாண்டியாவை பாராட்டும் ஜாம்பவான், முழுவிவரம்

மறுபுறம் இதுவரை 48 ஒருநாள் இன்னிங்சில் பங்கேற்றுள்ள பாண்டியா 1386 ரன்களையும் 63 விக்கெட்டுகளையும் எடுத்து அந்த மாபெரும் பயணத்தில் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement