Worldcup : ஹிட்விக்கெட் பாணியில் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா குப்தில் – புகைப்படம் உள்ளே

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Guptill-1
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியம் மோதின.

nz vs sa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 106 ரன்களை அடித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் குப்தில் ஹிட் விக்கெட் ஆன விவகாரம் தற்போது சூதாட்ட பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன் காரணம் யாதெனில் துவகத்திலேயே காலின் முன்ரோ விக்கெட்டை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.

Williamson

அதன்பின்னர் குப்தில் மற்றும் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நன்றாக விளங்கிக் கொண்டிருந்த குப்தில் 35 ரன்களில் ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். இதில் சூதாட்ட விவகாரம் வெளிப்பட காரணம் யாதெனில் அவர் ஹிட் விக்கெட்டாகும் பொழுது பீல்டிங் செய்து கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் தலையை கீழே குனிந்த படி அவர் நின்றிருந்தார்.

Guptill

அவர் அவுட்டானது கூட பார்க்காமல் அவர் கீழே குனிந்து நிற்பது தான் குறிப்பு எனவும் எனவே அந்த பந்தில் குப்தில் வேண்டுமென்றே விக்கெட் ஆகி இருக்க வேண்டும் என்றும் அந்த பந்தில் நிச்சயம் ஏதோ சூதாட்டம் நடைபெற்று இருக்கின்றது எனவும் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் குப்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement