தோத்ததுக்கு அப்புறமும் எங்கள் அணி வீரர்கள் சிரிக்கிறார்கள். என்னை கேப்டனா இல்ல ஒரு மனுஷனா கூட மதிக்கல – குல்புதின் நயிப்

Naib
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் களம் இறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் கடைசி இடத்தைப் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றியை நெருங்கினாலும் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதனால் வெற்றி வசப்படுத்தாமல் போனது.

Afg

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெறும் நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயிப் பந்துவீச்சால் அந்த போட்டியில் தோற்றது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக திடீரென குல்பதின் நயிப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது கேப்டன் மாற்றத்தில் அணியின் வீரர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே அவர்கள் நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் அவரை கேப்டனாக நியமித்தது.

அதன் பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்ற குல்பதின் நயிப் சரியாக விளையாடவில்லை. குல்பதின் நயிப் உலககோப்பை தொடர் தோல்விக்கு பின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தற்போது 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து பேசிய குல்பதின் நயிப் கூறியதாவது : எங்கள் அணியின் சீனியர் வீரர்கள் என்னுடைய கேப்டன்ஷிப்பை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் தனியாகவே முடிவுகளை எடுத்தனர்.

pak vs afg

மேலும் போட்டியின் போது என் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தோற்றபின் ஓய்வறையில் ஜாலியாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் யாரையாவது நான் பவுலிங் போட அழைத்தாலோ அல்லது பீல்டிங் செய்ய கேட்டுக் கொண்டாலோ அவர்கள் என்னை கண்டு கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்திற்கு நடந்தனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருத்தமாகப் பேசினார் குல்பதின் நயிப்.

Advertisement