- Advertisement -
உலக கிரிக்கெட்

அவருக்கு நன்றி.. ஒருவழியா உழைப்பால் ஆஸியை சாய்ச்சுட்டோம்.. எங்களோட சரித்திரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. நைப் பேட்டி

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்துள்ளது. ஜுன் 23ம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 51, ரஹமதுல்லா குர்பாஸ் 60 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹாட்ரிக் உட்பட பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்து ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்ப முதலே கச்சிதமாக பந்து வீசி மடக்கிப்பிடித்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவரில் ஆஸ்திரேலியாவை 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் சரித்திரம் படைத்தது.

- Advertisement -

சரித்திரம் துவங்கியது:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 4 ஓவரில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த குல்பதின் நைப் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தவற விட்ட வெற்றியை இங்கே பெற்றுள்ளதாக குல்பதின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்மை நம்பிய கேப்டன் ரசித் கானுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் சமீப காலங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தானின் வெற்றி சரித்திரம் துவங்கியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். எனக்கும் எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்களுக்கும் இது அற்புதமான தருணம். எங்களுடைய கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனை”

- Advertisement -

“எங்களுடைய பயணத்துக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதற்கான முடிவு உங்கள் முன்னே இருக்கிறது. பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது. ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை எடுத்த நான் அதை அப்படியே தொடர்ந்தேன். என்னை நம்பியதற்காக ரசித்துக்கு நன்றி. இது மொத்தமாக எங்களுடைய அணியின் செயல்பாடு”

இதையும் படிங்க: விராட் கோலியின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான்.. அதனால தான் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியால – ஆகாஷ் சோப்ரா

“குர்பாஸ் – இப்ராஹிம் நன்றாக பேட்டிங் செய்தனர். ஒரு வழியாக நாங்கள் ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மகத்தான சாதனைகள் இல்லை. கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இந்த உலகக் கோப்பையில் நாங்கள் நியூசிலாந்தை தோற்கடித்தோம். எங்களுடைய வெற்றிப் பயணம் துவங்கியுள்ளது. எங்களுடைய அணி நிர்வாகம் மற்றும் இந்த அணிக்காக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும் முக்கியம். தற்போது ஓய்வெடுத்து அடுத்த போட்டியை பற்றி சிந்திப்போம்” என்று கூறினார்.

- Advertisement -