சூதாட்டத்தில் ஈடுபட்ட தெ.ஆ வீரர். சிறைக்கு அனுப்பி அதிரடி காட்டிய அணி நிர்வாகம் – அதுவும் 5 வருஷம் ஜெயிலாம்

Gulam-Bodi
- Advertisement -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியவரும், இந்திய நாட்டை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குலாம் போடி. தென் ஆப்பிரிக்காவில் முதல் தரப் போட்டிகளில் விளையாடி தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் இடம்பிடித்தார்.

Gulam

- Advertisement -

இருப்பினும் ஒரு சில போட்டிகளில் விளையாடி நிலையில் அவர் மீண்டும் தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்த குலாம் போடி சிறப்பாக செய்யப்பட்டாலும் மீண்டும் தேசிய அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவர்மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதனை விசாரித்து அவருக்கு 20 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. ஆனால் இந்த வழக்கு தென்னாப்பிரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது வரை நடந்து வந்தது. தற்போது 40 வயதாகும் இவருக்கு வினோதமான ஒரு முடிவை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

Gulam 1

அது யாதெனில் இந்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது ஏனெனில் கிரிக்கெட் விளையாட தடை விதித்த பிறகும் அது மட்டுமின்றி 40 வயதாகும் இவருக்கு தற்போது இந்த 5 ஆண்டு சிறை தண்டனை அவசியமா என்பது போல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement