
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான சுப்மன் கில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்திய விடயமாக கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரின் போது டி20 போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்த அவருக்கு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியும் சேர்த்து வழங்கப்பட்டது.
அதனால் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டு மீண்டும் துவக்க வீரருக்கான இடத்திற்கு சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார்.
இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. அதோடு கடந்த மாதம் வெளியான டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் நீக்கப்பட்ட கையோடு ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எதிர்கால மூன்று வகையான இந்திய அணியின் கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் இப்படி திடீரென டி20 போட்டிகளில் இருந்து கழட்டி விடப்பட்டது மத்தியிலும் பேசப்படும் இடமாக மாறியிருந்தது. இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த சுப்மன் கில் : டி20 உலககோப்பை தொடருக்கான அணியில் விளையாட இருக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடைய நீக்கம் பற்றி பெரிய வருத்தம் எதுவும் இல்லை.
அணியின் காம்பினேஷனுக்கு எது சரியோ அதை தேர்வு செய்துள்ளார்கள். எனவே அதை ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவரது இந்த நீக்கம் குறித்து பேசியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியான அர்விந்தர் சிங் கூறுகையில் : ஒரு கிரிக்கெட் வீரராக இதுபோன்ற சில சறுக்களை சந்திப்பது எல்லோருக்குமே ஒரு இயல்பான விடயம் தான்.
இதையும் படிங்க : கடைசி போட்டியில் 70 ரன்கள் அடித்தால் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் மாபெரும் சாதனை – விவரம் இதோ
ஆனால் சுப்மன் கில் போன்ற ஒரு வீரர் இதை எல்லாம் கடந்து மிக வலிமையாக திரும்புவார். தேர்வுக்குழுவினரின் முடிவை அவர் மதித்துள்ளார். அதோடு அவருக்கு எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் தெரியும். நிச்சயமாக அவர் டி20 போட்டிகளில் மிக வலிமையாக திரும்புவார் என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமும் இல்லை என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.