அப்போ ஐபிஎல் 2022 கோப்பை வெல்லப்போவது இந்த அணிதானா? அசத்தலான புள்ளிவிவரம் இதோ

GT
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ள வலுவான லக்னோ – குஜராத் ஆகிய அணிகள் சந்தித்தன. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 144/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ரித்திமான் சாஹா 5 (11) மேத்தியூ வேட் 10 (7) கேப்டன் ஹர்திக் பாண்டியா 11 (13) என முக்கிய பேட்ஸ்மேங்கள் அனைவரும் வரிசையாக சொற்ப ரன்னில் அவுட்டாகி செல்ல நடுவரிசையில் அதிரடி காட்ட வேண்டிய டேவிட் மில்லரும் 26 (24) ரன்களில் நடையை கட்டினார்.

LSG vs GT Preview

- Advertisement -

அதனால் அந்த அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற சுப்மன் கில் 7 பவுண்டரியுடன் 63* (49) ரன்கள் எடுத்தார். இறுதியில் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட ராகுல் திவாதியா அதிரடியாக 22* (16) ரன்கள் சேர்க்க லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 145 என்ற எளிய இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 11 (10) கே எல் ராகுல் 8 (16) ஆகிய நட்சத்திரங்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். போதாகுறைக்கு அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 5 (5) ஆயுஷ் படோனி 8 (11) மார்கஸ் ஸ்டோனிஸ் 2 (2) ஜேசன் ஹோல்டர் 1 (2) தீபக் ஹூடா 27 (26) ஆகியோரும் வரிசையாக குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பியதால் 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ பரிதாபமாக தோற்றது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

LSG vs GT

டாப்பர் குஜராத்:
இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி குஜராத் பங்கேற்ற 12 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து 18 புள்ளிகளுடன் ஐபிஎல் 2022 தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. இந்த வருடம் முதல் முறையாக 5000+ கோடி என்ற மிகப்பெரிய தொகையில் உருவாக்கப்பட்ட அந்த அணிக்கு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஹர்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் தலைமையில் ஒவ்வொரு போட்டியிலும் சொல்லி அடித்த குஜராத் ஆரம்பம் முதலே புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தது.

- Advertisement -

தற்போது தொடர்ச்சியான வெற்றிகளால் முதல் சீனிலேயே அதுவும் முதலாவதாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி தங்களை குறைவாக எடை போட்டவர்களின் கணிப்புகளை பொய்யாக்கி சாதித்துக் காட்டியுள்ளது. அந்த அணிக்கு பந்துவீச்சில் ரசித் கான், முஹம்மது ஷமி ஆகியோருடன் கை கொடுக்கும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் 3-வது இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கி பலம் சேர்க்கிறார். சுப்மன் கில் டாப் ஆர்டரில் தேவையான ரன்களை எடுக்க மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் – ராகுல் திவாடியா ஆகியோர் கிடைக்காத வெற்றிகளைக் கூட தங்களது மிரட்டலான ஆட்டத்தால் பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.

gt

சாம்பியனாகுமா குஜராத்:
இதனால் ஆரம்பம் முதலே கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாக காட்சியளிக்கும் குஜராத் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சாதகமான ஒருசில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்ட போது ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதே போல ஒருசில நட்சத்திர வீரர்களுடன் நிறைய இளம் வீரர்களை வைத்துக் கொண்டு தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக இதேபோல் 9 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற அந்த அணி இறுதியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

cskvsmi

2. மேலும் கடந்த 2020இல் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையும் முதல் அணியாக 9 வெற்றிகளைப் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் 2021இல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையும் 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அதன்பின் கோப்பையையும் முத்தமிட்டது.

3. அதாவது ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே புதிய அணியான ராஜஸ்தான் எப்படி செயல்பட்டு கோப்பையை வென்றதோ அதேபோல் குஜராத் இம்முறை செயல்பட்டு வருகிறது.

Hardik Pandya GT

மேலும் கடைசி 2 ஐபிஎல் தொடர்களில் மும்பையும் சென்னையும் முதல் அணிகளாக 9 வெற்றியுடன் 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. எனவே கடந்த 2 வருடங்களை போல இம்முறை முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் இதேபோல செயல்பட்டால் நிச்சயம் பட்டம் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement