சேசிங் சாதனையுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி – விவரம் இதோ

GT vs RR
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

சாதனையுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 45 ரன்களையும் குவித்தனர். பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது :

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களையும், சாய் சுதர்சன் 58 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் குஜராத் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளையில் இந்த வெற்றி சாதனையுடன் வந்துள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் இதற்கு முன்னதாக 204 ரன்களை சேசிங் செய்ததே குஜராத் அணியின் அதிகபட்ச சேசிங் சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 15 வயதில் ஆண்ட்ரே ரசலின் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்திய – வைபவ் சூர்யவன்ஷி

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் 215 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தங்களது அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்து குஜராத் அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. மே 31-ஆம் தேதி நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement