- Advertisement -
ஐ.பி.எல்

அதிகாரப்பூர்வமாக சி.எஸ்.கே அணியை தொடரில் இருந்து வெளியேற்றிய குஜராத் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 66-ஆவது லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்களையும், சுப்மன் கில் 64 ரன்களையும் குவித்தனர். சென்னை சார்பாக முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

- Advertisement -

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சி.எஸ்.கே அணி 14 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்து அதிகாரப்பூர்வமாக இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் கேப்டனாக இவருக்கு வாய்ப்பு குடுத்தா சரியா இருக்கும் – ரிக்கி பாண்டிங் கருத்து

கடந்த சில போட்டிகளுக்கு முன்னதாக சி.எஸ்.கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த வேளையில் கடைசி இரண்டு போட்டியிலும் சென்னை அணி தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அணியின் ரசிகர்களும் சரி, சென்னை நிர்வாகமும் சரி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

- Advertisement -