IPL 2022 : இறுதிப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவன் இதோ – ஜெயிக்கப்போவது யாரு?

RRvsGT
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 73 போட்டிகள் முடிவடைந்த வேளையில் இறுதிப்போட்டியில் விளையாட ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

GTvsRR

- Advertisement -

இவ்விரு அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்ற போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய இறுதி போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமானாலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ள குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை காட்டிலும் சற்று வலுவானதாக காணப்படுகிறது. அதே வேளையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் அணி அதன் பின்னர் தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்ற கடுமையான போராட்டம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Miller 2

இந்நிலையில் இவ்விரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முழுமையான பங்களிப்பினை இந்த போட்டியில் வழங்குவார்கள் என்பதனால் இந்த போட்டி விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் சற்றும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய போட்டிக்கான இரண்டு அணிகளின் பிளேயிங் லெவனிலும் பெரும்பாலும் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன் இதோ : 1) ஷுப்மன் கில், 2) விருத்திமான் சாஹா, 3) மேத்யூ வேட், 4) ஹார்திக் பாண்டியா, 5) டேவிட் மில்லர், 6) ராகுல் திவாதியா, 7) ரஷித் கான், 8) அல்ஜாரி ஜோசப், 9) சாய் கிஷோர், 10) முகமது ஷமி, 11) யஷ் தயால்.

இதையும் படிங்க : தாய்க்கு உடல்நிலை சரியில்லை, ஆனாலும் ஐ.பி.எல் பைனலில் விளையாடும் ராஜஸ்தான் வீரர் – நெகிழவைக்கும் தகவல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ஜாஸ் பட்லர், 2) யாஷஸ்வி ஜெய்ஷ்வால், 3) சஞ்சு சாம்சன், 4) தேவ்தத் படிக்கல், 5) ஷிம்ரோன் ஹெட்மையர், 6) ரியான் பராக், 7) ரவிச்சந்திரன் அஸ்வின், 8) டிரன்ட் போல்ட், 9) பிரசித் கிருஷ்ணா, 10) ஒபிட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement