- Advertisement -
ஐ.பி.எல்

LSG vs GT : கடைசி வரை தடவலாகவே செயல்பட்ட கேஎல் ராகுல் – வெற்றியை வெற்றிலை பாக்கு வைத்து குஜராத்துக்கு கொடுத்த பரிதாபம்

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 30வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சுப்மன் கில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ரிதிமான் சகா 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போது 6 பவுண்டரியுடன் 47 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் வந்த அபினவ் மனோகர் 3 (5) விஜய் சங்கர் 10 (12) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் பொறுமையுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதமடித்த பின் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 66 (50) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லரும் 6 (12) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறியதால் 20 ஓவர்களில் குஜராத் 135/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

தடவிய ராகுல்:
லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 136 ரன்களை துரத்திய லக்னோவுக்கு முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே தடவிய கேப்டன் ராகுல் 1 ரன் கூட எடுக்காமல் மெய்டன் வழங்கினார். ஆனால் அவர் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்க விட்டு அதிரடியை துவங்கிய அவருடன் மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (19) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த க்ருனால் பாண்டியா தனது பங்கிற்கு நிதானமாக செயல்பட்டு 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (23) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 1 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் மறுபுறம் அரை சதம் அடித்து விட்டதால் அதிரடி காட்ட வேண்டிய ராகுல் தொடர்ந்து நிதானத்தை வெளிப்படுத்திய நிலையில் 19வது ஓவரில் முகமது ஷமி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் டபுள் எடுத்த ராகுல் 2வது பந்தில் 8 பவுண்டரியுடன் 68 (61) ரன்களில் ஆட்டமிழந்தது கலக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது ஆயுஷ் படோனி 8 (6) ரன்களில் ரன் அவுட்டானார்.

அடுத்த பந்தில் தீபக் ஹூடாவும் டபுள் எடுக்க முயற்சித்து ரன் அவுட்டானதால் 17 ஓவரில் 110/3 என்ற நிலையில் இருந்த லக்னோ 20 ஓவர்களில் 128/7 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்ற குஜராத் சார்பில் அதிகபட்சமாக கடைசி ஓவரில் அசத்திய மோகித் சர்மா மற்றும் நூர் அஹமத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னாதாக இப்போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் டாஸ் வென்றும் ஹர்திக் பாண்டியா தவிர்த்து இதர வீரர்கள் தடுமாறியதால் குஜராத் பெரிய ஸ்கோரை எடுக்க தவறியது.

- Advertisement -

அதே போல வெறும் 136 ரன்களை துரத்தும் போது இதர லக்னோ பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதிலும் கேஎல் ராகுல் வழக்கம் போல பொறுப்புடன் செயல்பட்டார். ஆனால் முழுமையாக செட்டிலாகியும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 111.48 என்ற தடவலான ஸ்ட்ரைக் ரேட்டிலேயே பேட்டிங் செய்த அவர் கடைசி ஓவரில் அவுட்டாகி கையிலிருந்த வெற்றியை வெற்றிலை பாக்கு வைத்து குஜராத்துக்கு பரிசளித்தார்.

இதையும் படிங்க:CSK : நீங்க விளையாடுனது போதும் கிளம்புங்க. ஸ்டீபன் பிளமிங்கின் பேட்டியால் நட்சத்திர வீரர் மீது – ரசிகர்கள் கோபம்

ஏனெனில் கடைசி ஓவரில் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் குஜராத்தின் நேர்த்தியான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் அவுட்டாகி சென்றனர். குறிப்பாக 15, 16, 17, 18, 19 ஓவரில் முறையே 1, 3, 4, 6, 5 என ராகுல் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ தோற்றது.

- Advertisement -