கேப்டனாக விளையாடனுனு ஆசை இருந்துச்சே தவிர கங்குலி இந்த விஷயத்தை யோசிக்க கூட இல்ல – சேப்பல் தாக்கு

Chappell

தற்போது மாடர்ன் டே கிரிக்கெட்டில் மிகப் பெரும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது, இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அப்படி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சர்ச்சையாகப் பார்க்கப்பட்டது என்றால், அது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கும், இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளராக செயல்பட்ட கிரேக் சாப்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் என்று சொல்லலாம். 2005ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட க்ரேக் சாப்பல், இந்திய அணிக்கு தான் பயிற்சியளித்த இரண்டு ஆண்டுகளின்போது சவுரவ் கங்குலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தைப் பற்றி ஒரு விளையாட்டு நாளிதழுக்கு பேட்டியாக அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

Chappell 2

2005 முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு பயிற்சியாளாராக என்னை தேர்வு செய்தபோது, கிரிக்கெட்டை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் ஒரு நாட்டிற்காக, நான் பயிற்சியாளராக இருக்கப்போகிறேன் என்பதை நன்றாக உணர்ந்திருந்தேன். அப்போது ஆஸ்திரேலிய அணியைப்போல் இந்திய அணியையும் மாற்றிக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்தியாவிற்கு சென்றேன். ஆனால் அங்கு சென்ற பின் எல்லாமே வேறுமாதிரியாக மாறிப்போனது. குறிப்பாக அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி, தான் ஒரு கேப்டனாக மட்டும் இருந்துகொண்டு அணியில் இருக்கும் மற்ற வீரர்களின் மீது அதிகாரம் செலுத்துவதை மட்டுமே விரும்பினார். மேலும் அவர் இந்திய அணிக்காக எந்த ஒரு பங்களிப்பையும் அளிக்க விரும்பவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கிரிக்கெட் திறமையைகூட வளர்த்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.

- Advertisement -

எனவே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படி இந்திய அணியின் கேப்டனையே அணியிலிருந்து நீக்கியதால், மற்ற மூத்த வீரர்கள் தங்களது இடத்தைப் பாதுகாத்து கொள்ள சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவரிடம் ராகுல் ட்ராவிட்டைப் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த அவர், நான் பயிற்சளித்த இந்திய அணியில், அணிக்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது ராகுல் ட்ராவிட் மட்டும்தான். அவரைத் தவிர மற்ற எந்த மூத்த வீரர்களும் அணிக்காக தங்களது பங்களிப்பை அளிக்க விரும்பவில்லை். அணியோடு இருந்தால் மட்டும்போதும் என்று அவர்கள் கருதினர்.

Chappell1

சவுரவ் கங்குலியை நீக்கிய பின் சென்ற 12 மாதங்களில், மூத்த வீரர்களின் பங்களிப்பு அதிகமானது. அந்த 12 மாதமும் எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதற்குப் பின் மீண்டும் அணியில் இணைந்த சவுரவ் கங்குலியால், எனக்கு எதிரான குரல்கள் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது. மூத்த வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் எனக்கு எதிராக பேசி வந்தனர் என்பதோடு மட்டுமல்லாமல் மீடியாக்களிலும் எனக்கு எதிரான குற்றச் சாட்டுகளை வைத்தனர். எனது பதவிக்காலம் முடிந்த பின்னரும், நான் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ விரும்பியது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் மூத்த வீரர்களின் செயல்பாடுகளால் ஏற்கனவே மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த நான், இந்திய அணிக்கு இனிமேலும் என்னால் பயிற்சியாளராக செயல்பட முடியாது என்று நினைத்து அதை மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் கலந்து கொண்ட இந்திய அணிக்கும் க்ரேக் சாப்பல் தான் பயிற்சியாளராக இருந்தார்.

Chappell 3

வித்தியசமான முடிவுகளை எடுக்கிறேன் என்று கூறி, அந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் ராபின் உத்தப்பா, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், மற்றும் கங்குலி என நான்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்தார். இதனால் எந்த வீரரை எங்கு ஆட வைப்பது என்று தெரியாமல் தினறிய, ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி அந்த உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது என்பது குறிப்பிபடத்தக்கது.

Advertisement