பும்ராவை அதில் ஏமாத்துறாருன்னு சொல்றவங்க நான்சென்ஸ்.. ஆஸி ரசிகர்களை விளாசிய கிரேக் சேப்பல்

Greg Chappell 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். அதை விட முதல் இன்னிங்ஸில் சுமாராக பேட்டிங் செய்த இந்தியா 150க்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக தோற்றதை போலவே ஆஸ்திரேலியாவிலும் இந்தியா தோற்கும் என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

- Advertisement -

பும்ரா அசத்தல்:

ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 2வது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தம்மை சாம்பியன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்தார். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று ஒரு தரப்பு ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

குறிப்பாக பும்ராவின் பவுலிங் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

நான்சென்ஸ் விமர்சனம்:

இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் கூறியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் கூர்மையாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்பட்டார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்”

இதையும் படிங்க: எல்லாமே சரியா தான் பண்ணீங்க.. ஆனா கே.கே.ஆர் செய்த தப்பு இதுதான் – சுட்டிக்காட்டிய ரசிகர்கள்

“இதற்கிடையே பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சுத்தமானது. அப்படிப்பட்ட அவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோஹித் தலைமையில் இந்தியா விளையாட உள்ளது.

Advertisement