- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ட் மிஸ்ஸான தோல்விக்கு கவலைப் படாதீங்க.. இதை வெச்சு கில் இந்தியா கலக்கப் போறாங்க.. கிரேக் சேப்பல்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது என்றே சொல்லலாம். ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்தப் போட்டியில் 5 சதங்கள் அடித்து இந்தியா சாதனை படைத்தது.

ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் இந்தியா நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியது. இது போக 7 கேட்ச்களை தவற விட்ட இந்தியா வெற்றியை இங்கிலாந்துக்கு தாரை வார்த்தது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

- Advertisement -

கவலை வேண்டாம்:

மொத்தத்தில் எதிர்பார்த்ததைப் போலவே சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியிலேயே சொதப்பி தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இத்தொடரை இந்தியா வெல்வது கடினம் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் முதல் போட்டியில் தோற்றதற்காக இந்தியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

ஏனெனில் சுப்மன் கில் தம்முடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்ததாக அவர் பாராட்டியுள்ளார். இந்த தோல்வியிலிருந்து இளம் இந்திய அணி பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேறி விரைவில் வெற்றிகளை குவிக்கப் போவதாகவும் சேப்பல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சேப்பல் நம்பிக்கை:

“இந்தியா வெற்றியைப் பெறாவிட்டாலும் சுப்மன் கில் கேப்டனாகவும் வீரராகவும் சிறப்பான துவக்கத்தைப் பெற்றுள்ளார். அது சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இருப்பினும் புத்தகத்தில் இந்தியா சரியான பக்கத்தில் இடம் பெறாதது சோகமானதாகும். ஆனாலும் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்தன”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் 4 கேட்ச் தவற விட இதான் காரணம்.. டுக் பந்துகள், டேப் பின்னணியை பகிர்ந்த ஃகைப்

“இந்தத் தோல்வியிலிருந்து கில் மற்றும் இந்திய அணியினர் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு நிறைய கற்றுக் கொண்டிருப்பார்கள். சுப்மன் கில் இங்கிருந்து இன்னும் சிறப்பாக மட்டுமே மாறுவார். அவருடைய துவக்கம் நன்றாக இருந்ததாக நான் நினைக்கிறேன். சொல்லப்போனால் கேட்ச்கள் பிடிக்கப்பட்டு, டெய்ல் எண்டர்கள் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருந்தால் இந்தியாவின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -