திறமையான சுந்தர் இந்திய அணிக்காக இந்த 2ஐயும் செய்யலன்னா ஆச்சர்யப்படுவேன்.. கிரேக் சேப்பல் பாராட்டு

Greg Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்துக்கு கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன் காரணமாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த மிராக்கள் வெற்றிக்கு முகமது சிராஜ் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல மற்ற அனைத்து வீரர்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருப்பினும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3வது நாளின் மாலையில் 4 சிக்சர்களுடன் அதிரடியாக 53 ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

திறமையான சுந்தர்:

கடைசியில் பார்த்தால் சுந்தர் பறக்க விட்ட 4 சிக்ஸர்களில் ஒன்று தான் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் வித்தியாசமாக இருந்துள்ளது. சொல்லப்போனால் பிரசித் கிருஷ்ணாவுடன் சேர்ந்து அவர் 10வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதை அவர் அடிக்காமல் போயிருந்தால் ஆட்டம் 5வது நாளுக்கு வந்திருக்காது என்றே சொல்லலாம்.

அதற்கு முன்பாகவும் மான்செஸ்டரில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது கில், ராகுல் போராட்டத்தை வீணடிக்காமல் ஜடேஜாவுடன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுந்தர் தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அதற்கு முந்தையப் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் ஆகியோரை சுந்தர் தனது மாயாஜால சுழலால் கிளீன் போல்டாக்கி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

கிரேக் சேப்பல் பாராட்டு:

இந்நிலையில் பேட்டிங், பவுலிங்கில் திறமையான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் அடுத்த முதன்மை ஸ்பின் ஆல் ரவுண்டராக வருவார் என்று முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். சுந்தர் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் போனால் தாம் ஆச்சரியப்படுவேன் என்றும் ஆஸ்திரேலியாவின் சேப்பல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: சி.எஸ்.கே டீமுக்கு நோ.. சஞ்சு சாம்சன் எங்கேயேயும் போக மாட்டாரு.. முற்றுப்புள்ளி வைத்த – ராஜஸ்தான் ராயல்ஸ்

“ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் இங்கிருந்து தன்னை இந்திய அணியின் முதன்மை ஆல் ரவுண்டராக தன்னை உருவாக்காமல் விட்டால் நான் ஆச்சரியப்படுவேன். அவர் 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். இனிமேல் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதால் வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறுவார் என்று நம்பலாம்.

Advertisement