கோலி மீது எந்த தப்பும் இல்ல. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல தோக்க இதுவே காரணம் – ஸ்வான் பேட்டி

Swann
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால், மீண்டும் ஒரு முறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி. இதனையடுத்து விராட் கோஹ்லியின் கேப்டன்சியை சராமாரியாக விமர்சித்து வரும் இந்திய ரசிகர்கள் அவரை, கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனைக் கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான கிரேம் ஸ்வான், இந்திய அணியை இரும்பு கோட்டையாக கட்டமைத்ததே விராட் கோஹ்லிதான் என்று கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்க வேறு ஒன்றுதான் முக்கிய காரணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

kohli 1

- Advertisement -

2017ஆம் ஆண்டு, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திர சிங் தோணி அந்த பதிவியில் இருந்து விலகியதால், விராட் கோஹ்லியிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தி இருக்கும் அவர், இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்ற தவறியிருந்தார். அதிலிருந்தே அவருடைய கேப்டன்சியின்மீது பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை ஐசிசி கோப்பையை தவறவிட்டிருக்கும் அவரைப் பற்றி தனியார் இணையதளம் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் கிரேம் ஸ்வான் கூறியதாவது, கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார். இந்திய அணியை இரும்புக் கோட்டையாக கட்டமைத்ததே அவர்தான். ஒரு போட்டியில் அவருடைய நடவடிக்கைகளை பாருங்கள். அதில் அவர் தனது 100 சதவீத உழைப்பையும் கொடுத்திருப்பார். அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

IND

அப்படி அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கினால் அது கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிராக இழைக்கப்படும் மிகப் பெரிய குற்றமாக இருக்கும். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எந்த ஒரு பயிற்சி போட்டியும் இல்லாமல் போனது தான், அந்த அணியின தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த இரண்டாம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்ற இந்திய அணிக்கு, இறுதிப் போட்டிக்கு முன்பாக எந்த ஒரு பயிற்சி போட்டியையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அமைத்து தரவில்லை.

shami 2

அதனால் இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் மட்டுமே இந்திய வீரர்களால் விளையாட முடிந்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்பாக, கவுண்ட்டி அணிகளுடன் இரண்டு பயிற்சி போட்டிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்ட பிசிசிஐயின் கோரிக்கையையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நிராகாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement